எதற்கும் துணிந்தவன் திரை விமர்சனம் ரேட்டிங் 3.75 / 5

நடிகர் நடிகைகள் – சூர்யா,
சத்யராஜ், வினய், பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, வேல ராமமூர்த்தி, சூரி, எம் எஸ் பாஸ்கர், புகழ், ஜெயபிரகாஷ். விஜய் டிவி ராமர், தங்கதுரை, தேவதர்ஷினி, மற்றும் பலர்.
இயக்கம் – பாண்டிராஜ்.
ஒளிப்பதிவு – ரத்னவேலு.
படத்தொகுப்பு – ரூபன்.
இசை – டி இமான்.
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்.
ரேட்டிங் – 3.75 /5
நாகர்கோவில் மற்றும் பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை நினைவுக்கு கொண்டு வரும் வகையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் மிரட்டல்களை பெண் பாலியல் தொந்தரவுகள் அனைத்தையும் மையமாக வைத்து எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
எதற்கும் துணிந்தவன்’ என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஒரு அதிரடியான ஆக்ஷன் திரைப்படமாகதான் இருக்கும் என நினைத்து பார்த்தால் ஆக்சன் எமோஷனல் காமெடி என அனைத்தும் கலந்து நூறு சதவீதம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படமாக அமைந்திருக்கிறது இந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.
வட நாடு, தென்னாடு என்று இரண்டு கிராமங்கள். அந்த தென்னாட்டு கிராமங்களில் இருந்து வடநாட்டிற்கு கிராமங்களுக்கு பெண்களை திருமணம் செய்து கொடுப்பார்கள்.
இது அந்த ஊரில் ஒரு வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தென்னாடு, வடநாடு இரண்டு கிராமங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது.
தென்னாடு பகுதியில் வழக்கறிஞராக இருக்கும் கதாநாயகன் சூர்யா, அப்பா சத்யராஜ், அம்மா சரண்யா பொன்வண்ணன் உடன் வாழ்ந்து வருகிறார்.
தென்னாடு பகுதியில் உள்ள வழக்கறிஞரான கதாநாயகன் சூர்யா, வடநாடு பகுதி பெண்ணான கதாநாயகி பிரியங்கா அருள் மோகனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
தென்னாடு கிராமத்திலுள்ள பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்கினார் மத்திய அமைச்சர் மகன் வில்லன் வினய்.
அந்த சமயத்தில் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள் அநத தற்கொலையால் இரண்டு பகுதி கிராமங்களுக்கும் தீராத பகை ஏற்பட்டுவிடுகிறது.
இந்நிலையில் ஊரில் சில பெண்கள் கொலை மற்றும் தற்கொலை, விபத்து என அடிக்கடி நடந்து வருகிறது..
இந்த ஆபாச விடியோ விஷயம் கதாநாயகன் சூர்யாவுக்குத் தெரிய வர, அதன் பின் என்ன நடக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க கதாநாயகன் சூர்யா தீவிரமாக இறங்குகிறார்.
இதன் பின்னணியில் அமைச்சரின் மகன் வினய் இருப்பது கதாநாயகன் சூர்யாவிற்கு தெரிய வருகிறது.
இறுதியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்தது யார்? பெண்களை கொலை செய்ய காரணம் என்ன? இதற்கெல்லாம் காரணமான வில்லன் வினய்க்கு கதாநாயகன் சூர்யா தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா ? என்பதுதான் இந்த எதற்கும் துணிந்தவன்
திரைப்படத்தின் மீதிக்கதை.
இநத எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வழக்கறிஞரான கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் சூர்யா, காமெடி, நடனம், ரொமான்ஸ், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்திலும் அசத்தி இருக்கிறார்.
வேட்டியை மடித்துக் கட்டினால் எதிரிகளை பந்தாடும் வீரனாகவும்.
கோர்ட்டுக்கு செல்ல கோட்டை மாற்றினால் வாதாடி வெல்லும் சூரன் ஆகவும் நடித்திருக்கிறார் சூர்யா.
குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக வரும் பிரியங்கா அருள் மோகன் அழகாகவும் வெள்ளி தனமாகவும் நடித்து ரசிகர்களை மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.
திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் நேரம் போவது தெரியாமல் தன்து காதல் நடிப்பில் உட்கார வைத்துவிட்டார் பிரியங்கா அருள் மோகன்.
வடநாடு பகுதியில் இருக்கும் மிகவும் செல்வாக்கு மிக்கவராக அமைச்சரின் மகனாக வரும் வினய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வினய் ஸ்டைலிஷ் வில்லனாக மிக கொடூரமாகவும் நடித்து அசத்தி இருக்கிறார்.
இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு திரைப்படத்திற்கு மிக பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
கதாநாயகன் சூர்யாவின் அன்பான தந்தையாக சத்யராஜ், பாசமான தாயாக சரண்யா பொன்வண்ணன்.மிகவும் அருமையாக சில பல சுவாரசிய காட்சிகளில் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகி பிரியங்கா அருள் மோகனின் தந்தையாக இளவரசு, தாயாக தேவதர்ஷினி, ஒரு
சில காட்சிகள்தான் என்றாலும் திரைப்படம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் சூரியும் விஜய்டிவி புகழும் இருக்கிறார் என்பதுடன் அவரது கதாபாத்திரம் இருக்கிறது.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது.
இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
உள்ளம் உருகுதையா’ பாடலில் பார்த்து ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ரத்தினவேலு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்துக் கொடுத்திருக்கிறார்.
ரூபனின் படத்தொகுப்பு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு கொடுத்திருக்கிறார்.
ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் எப்படி எல்லாம் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கூறிய இயக்குனர் பாண்டிராஜ் பாராட்டுகள்.
பெண்களின் காவலன் பாதுகாப்புக்காக ‘காவலன் எஸ்ஓஎஸ்’ என்ற கைபேசி ஆப் இருக்கிறது என்பது இந்த திரைப்படம் மூலம் பல பெண்களுக்கும் கண்டிப்பாக தெரிய வரும்.
பெண்கள பயன்படுத்தும் கைபேசிகளில் டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் இருப்பதை விட இந்த காவலன் ஆப் இருக்க வேண்டும் என்ற காட்சியும், அதை திரைப்படத்தில் சரியான நேரத்திலும் பயன்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.
பெண்களுக்கு பிரச்சினை வந்தால் பெண்கள் எல்லாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்று பேசும் சில வசனங்களில் கைத்தட்டல் வாங்கிவிடுகிறார்.
குறிப்பாக வில்லன் வினயின் கதாபாத்திரம். மத்திய அமைச்சரின் மகனாக இருந்து கொண்டு பெண்களுக்கு எதிராக இதையெல்லாம் செய்கிறார் என்பதை விளக்கமாக சொல்லி இருக்கலாம்.
அப்படி ஒரு சில காட்சிகள் தான் திரைப்படம் ஓடும் ஓட்டத்தில் இதெல்லாம் தெரியவில்லை.
மொத்தத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் பெண்களின் காவலன்.











