அந்த டுவிட்டர் கணக்கு என்னுடைய அல்ல போலியானவை.நடிகர் மயில்சாமி.
சென்னை 28 மே 2021
அந்த டுவிட்டர் கணக்கு என்னுடைய அல்ல போலியானவை.நடிகர் மயில்சாமி
தமிழ் திரைப்பட உலகில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி.
டுவிட்டர் பக்கத்தில் எனது பெயரில் இருக்கும் டுவிட்டர் கணக்கு போலியானவை என்று கூறியுள்ளார் நடிகர் மயில்சாமி.
நடிகர் யோகிபாபு, சிபிராஜ், நடிகை அதுல்யா ஆகியோரின் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அதை பொது வெளியில் சமீபத்தில் அவர்கள் தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அதே போன்று நடிகர் மயில்சாமியும் டுவிட்டர் பக்கத்தில் உள்ள போலி கணக்கால் பாதிக்கப்பட்டுள்ளார்.