பீஸ்ட திரைப்படத்திற்கு மட்டும் புதுச்சேரி உள்ள  திரையரங்குகளில் 5 நாட்கள் டிக்கெட் கட்டணம் உயர்வு.!

சென்னை 08 ஏப்ரல் 2022 பீஸ்ட திரைப்படத்திற்கு மட்டும் புதுச்சேரி உள்ள  திரையரங்குகளில் 5 நாட்கள் டிக்கெட் கட்டணம் உயர்வு.!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்,
அனிருத் இசையமைப்பில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் 30 மில்லியன் ரியல் டைம் வியூஸ்ஸை அள்ளி அபார சாதனையை படைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய அனைத்து மொழிகளில் வரும் 13 ஆம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் திரையரங்குகளில் வரும் ஏப்ரல் 13 முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக போர்டுகள் தயாரித்துள்ளனர்.

அதில் 3 ஆம் வகுப்பு கட்டணம் ரூபாய் 50ல் இருந்து ரூபாய் 150 ம், இரண்டாம் வகுப்பு ரூபாய். 75ல் இருந்து ரூபாய். 175 ம், முதல்வகுப்பு கட்டணம் ரூபாய். 100ல் இருந்து ரூபாய்.200ம், பால்கனி ரூபாய். 150ல் இருந்து ரூபாய். 250ம், பாக்ஸ் ரூபாய். 160ல் இருந்து ரூபாய். 260ம் என்று உயர்த்தப்படுவதாக எழுதப்பட்டிருந்தது.

விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறியதாது…

இதுவரை இதுபோல் நடந்ததில்லை.

பொது மக்களை ஏமாற்றும் செயல்.

எந்த திரைப்படம் வந்தாலும் சரியான கட்டணமே வாங்க வேண்டும்.

பெரிய நடிகரின் திரைப்படம் என்றால் ரூபாய் 100 வரை அனைத்து வகுப்புகளுக்கும் உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு” என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

கட்டண உயர்வு கூறித்து ஆட்சியர் அலுவலக தரப்பில் விசாரித்தபோது…

“புதுச்சேரி திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி தரவில்லை” என்று குறிப்பிட்டனர்.

விஜய் நடிப்பில் பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பேனர்களில் முதல்வர் ரங்கசாமி புகைப்படங்கள் இடம்பெற்றது.

அது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டண உயர்வும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!