கே.ஜி.எப் 2 திரை விமர்சனம் ரேட்டிங் – 4.5 /5

நடிகர் நடிகைகள் – யஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ரெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், அர்ச்சனா ஜோயிஸ், மாளவிகா அவினாஷ், ராவ் ரமேஷ், மற்றும் பலர்.

இயக்கம் – பிரசா.ந்த் நீல்.

ஒளிப்பதிவு – புவன்
கவுடா.

படத்தொகுப்பு – உஜ்வல் குல்க்ராணி.

இசை – ரவிபஸ்ரூர்..

தயாரிப்பு – ஹம்பலே பிலிம்ஸ்.

ரேட்டிங் – 4.5 /5

2018ம் வருடம் கன்னடத் திரைப்பட உலகில் வெளிவந்த ‘கே.ஜி.எப்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

இயக்குனர் பிரசாந்த் நீல், கதாநாயகன் யஷ் கூட்டணி இந்த திரைப்படம் மூலம் இந்திய திரையுலகில் ஒரு புதிய ‘டிரென்ட் செட்’ செய்து விட்டார்கள்.

தற்போது வெளியாகி இருக்கும் ‘கே.ஜி.எப் 2’ இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.

முதல் பாகத்தில் மும்பையில் இருந்து கே.ஜி.எப் பிற்கு ஒரு கொலை செய்ய வந்து அங்கு அடிமையாக வேலை செய்ய ஆரம்பிப்பர் கதாநாயகன் யஷ்.

அதன் பின் அந்த தங்கக் கோட்டைக்கே கதாநாயகன் யஷ் தனது சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சந்திக்கும் கதைதான் இந்த கே.ஜி.எப் இரண்டாம் பாகம்.

கே.ஜி.எப் பில் அடிமையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் கதாநாயகன் யஷ்.

கே.ஜி.எப் சாம்ராஜ்ஜியத்தில் இனி தான்தான் ராஜா என இதுவரை அங்கு தங்களை தாதா என சொல்லி வந்தவர்களை அழைத்துச் கூறுகிறார் கதாநாயகன் யஷ்.

கே.ஜி.எப்-பை பிடிக்க கதாநாயகன் யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், கதாநாயகன் யஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள்.

அதே சமயம் இறந்து விட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எப் யை கைப்பற்ற தனது படைகளுடன் வருகிறார்.

இறுதியில் எதிரிகளை எதிர்த்து கதாநாயகன் யஷ், கே.ஜி.எப்யை தக்க வைத்துக் கொண்டாரா? இதனிடையே, தன்னுடைய கேஜிஎப் கோட்டையை இழந்த சஞ்சய் தத்தும் அதை மீண்டும் கைப்பற்ற நினைக்கிறார்.

சஞ்சய் தத்தின் நிலைமை என்ன ஆனது?

இப்படியான சூழலில் கதாநாயகன் யஷ் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த கே.ஜி.எப் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் மீதிக் கதை

கதாநாயகனாக நடித்து இருக்கும் யஷ் நடித்து இருக்கிறார்.

இந்த கே.ஜி.எப் திரைப்படத்தை
தனி ஒருவனாக தனது தோள்களில் சுமந்து செல்கிறார்.

மாஸ் கதாநாயகனாக மனதில் நிற்கிறார்.

இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார்.

அகிரா என்ற மிரட்டல் வில்லனாக சஞ்சய் தத்.

Read Also  பிஸ்கோத் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 /5

அவரது தோற்றமும், உடல்மொழியும் ஹாலிவுட் வில்லனைப் பார்ப்பது போல உள்ளது.

சஞ்சய் தத் மிரட்டலான நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார்.

அவருடைய கெட்டப்பும் பார்வையும் மிரட்டல்.

சஞ்சய் தத், ரவீனா டாண்டன், படத்தில் மிரட்டும் இரண்டு முக்கியமானவர்கள்.

பிரதம மந்திரியாக ரவீனா டாண்டன். பெண் என்றால் அழகு மட்டும்தான் என்று யார் சொன்னது, பெண்களின் கம்பீரமே தனி என தனது நடிப்பால் நிரூபிக்கிறார்.

ரவினா டாண்டன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் அச்யுத் குமார், ஈஸ்வரி ராவ், சரண் கவனம் பெறுகிறார்கள்.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலமான  சண்டைக் காட்சிகளில் மாஸ்டர் அன்பறிவ் மாஸ் காட்டியிருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். கர்நாடகா, மும்பை, கே.ஜி.எப் சுரங்கம் என சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்

இசையமைப்பாளர் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்குனர், சண்டைப் பயிற்சி, ஒலிப்பதிவு, ஆடை வடிவமைப்பு என பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இது கே.ஜி.எப் தங்களுக்கான திரைப்படம் என்பதை உணர்ந்து அவர்களது சிறந்த ஈடுபாட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தை விட 2 மடங்கு மாஸாக படத்தை உருவாக்கியிருக்கிறார்

இயக்குனர் பிரஷாந்த் நீல். விறுவிறுப்பான திரைக்கதை, காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆட்பறிக்கும் சண்டைக்காட்சிகள், என படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்து ரசிகர்கள் ரசிக்கும் உருவாக்கி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘கே.ஜி.எஃப்’ 1 மாஸ் ‘கே.ஜி.எப்’ 2 மெகா மாஸ்.