பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலாமானார்.

சென்னை 28 ஏப்ரல் 2022 பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலாமானார்.

தமிழ் திரைப்பட உலகில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்த நடிகர் சலீம் கவுஸ் இன்று காலாமானார்.

கேப்டன் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் தளபதி விஜய் நடித்த வேட்டைக்காரன் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் சலீம் கவுஸ்.

திருடா திருடா, வெற்றி விழா, சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

தமிழ் திரைப்பட உலகில் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களான ஸ்வர்க் நரக், மந்தன், கலியுக், சக்ரா, சரண்ஷ், மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ, திரிகல், அகாத், த்ரோஹி, சர்தாரி பேகம், கொய்லா, சிப்பாய் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் அவ்வப்போது நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

இவர் ராமர், கிருஷ்ணர் மற்றும் திப்பு சுல்தான் போன்ற வேடங்களில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

சென்னையில் பிறந்த சலீம் கவுஸ், மும்பையில் வசித்து வந்தார்..

70 வயதாகும் அவர் உடல்நலக்குறைவால் காலாமானார்.

ரசிகர்களின் பெரும் பாராட்டை பெற்ற சலீம் கவுஸின் மறைவு ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.