மாமனிதன் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25/5.

நடிகர் நடிகைகள் :- விஜய் சேதுபதி, காயத்ரி ஷங்கர், குரு சோமசுந்தரம், சரவண சக்தி, கஞ்சா கருப்பு, ஷாஜி சென், நகை மேரி, அனிகா சுரேந்திரன், கே.பி.ஏ.சி. லலிதா, மற்றும் பலர்.

இயக்கம் :- சீனு ராமசாமி.

ஒளிப்பதிவு :- எம்..சுகுமார்.

படத்தொகுப்பு :- ஸ்ரீகர் பிரசாத்.

இசை :- இசைஞானி இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா.

தயாரிப்பு :- ஒய்.ஏஸ்.ஆர். ஃபிலிம்ஸ்.

ரேட்டிங் :- 3.25 / 5.

 

தமிழ் திரைப்பட உலகில் ஒரு மனிதனின் வாழ்வியலை மையமாக வைத்து வரும் திரைப்படங்கள் அத்தி பூத்தாற் போல் அபூர்வமாகத்தான் வருகிறது.

ஒரு மாமனிதனின் வாழ்வியலை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்தான் மாமனிதன்.

ஒரு ஆணாக பிறந்தால் தனது குடும்பத்தை காப்பாற்ற ஒவ்வொரு குடும்பத் தலைவனும் நேரம் காலம் பார்க்காமல் கஷ்டப்பட்டு உழைத்து தான் ஆகவேண்டும்.

ஒரு குடும்பத் தலைவன் தன்னை விட தனது மனைவி மற்றும் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தந்தையின் வாழும் வரை பெரும் கனவாக இருக்கும்

அப்படி ஒரு பெருங்கனவுடன் வாழும் தந்தையின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அவனை எப்படி மாமனிதனாக மாற்றுகிறது

தேனி மாவட்டம் உள்ள பண்ணைபுரத்தில் முதல் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதி மற்றும் அழகான மனைவி கதாநாயகி காயத்ரி மகன், மகளுடன் நடுதர குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதி ஆட்டோவில் குழந்தைகளை எற்றி கொண்டு ஆங்கில வழி பயிலும் பள்ளியில் இறக்கி விடும் போது, தனது குழந்தைகளும் ஆங்கிலம் வழி பயிலும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கதாநாயகன் விஜய் சேதுபதி நினைக்கிறார்.

தனது குழந்தைகளும் ஆங்கில வழி பயிலும் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டு அதிக பணத்திற்கு ஆட்டோ ஓட்டுவதை விட்டு விட்டு, ரியல் எஸ்டேட் புரோக்கராக வேலைக்கு மாறுகிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதியை கூறியதால் ஊர் மக்கள் அனைவரும் நம்பி முதலீடு செய்கிறார்கள்.

ஊர் மக்களுக்கு நிலத்தை பதிவு செய்யும் நேரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் ஊர் மக்கள் அனைவரையும் மற்றும் கதாநாயகன் விஜய் சேதுபதியும் ஏமாற்றி விட்டு சென்று விடுகிறார்.

ரியல் எஸ்டேட் அதிபர் ஏமாற்றி விட ஊரில் உள்ள மக்களிடம் மானம் மரியாதை இழக்கிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.

மேலும் இவரை காவல்  துறையினர் தேட ஆரம்பிக்கிறது.

அப்போது இளவயது முதல் தன்னுடைய இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொண்ட இஸ்லாமிய நண்பர் குரு சோமசுந்தரதிடம் தனது நிலைமையை விளக்கி தனது வீடு மனைவி மற்றும் குழந்தைகள் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு தலைமறைவாகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.

இறுதியில் கதாநாயகன் விஜய் சேதுபதி, மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? இல்லையா?கதாநாயகன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை என்ன ஆனது? கிராம மக்களிடம் பணத்தை ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் கண்டு பிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லை? என்பதுதான் இந்த மாமனிதன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத மாமனிதன் திரைப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி.

அன்பு, பாசம் அக்கறை கொண்ட நடுத்தர வர்க மனிதனாக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

கோபத்தை அடக்குவது, பின்னர் வெளிப்படுத்தும் விதம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

இவருக்கு போட்டியாக நடிப்பில் அசத்தி இருக்கிறார் கதாநாயகி காயத்ரி சங்கர்.

கதாநாயகி காயத்ரி சங்கர் கதாநாயகியின் நடிப்பு எதார்த்தமாகவும், இயல்பாகவும் இருக்கிறது.

அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

கணவர் கதாநாயகன் விஜய் சேதுபதி மீது அக்கறை, பிள்ளைகள் மீது பாசம், ஊர் மக்களின் பேச்சை சமாளிப்பது என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

கதாநாயன் விஜய் சேதுபதியின் நண்பராக வரும் குருசோம சுந்தரம் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.

கடினமான காட்சிகளை சாதாரணமாக நடித்து விட்டு செல்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

இசைஞானி மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது.

குறிப்பாக ‘நினைத்து ஒன்று… நடந்தது ஒன்று’ என்ற பாடல் தாளம் போட வைக்கிறது.

சுகுமாரியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

தனக்கே உரிய பாணியில் திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் சீனு ராமசாமி.

இயக்குனர் சீனுராமசாமி இயக்கும் திரைப்படத்தை பொறுத்தவரை கதை தான் பேசப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

மொத்தத்தில் ‘மாமனிதன்’ திரைப்படம் சிறந்த மனிதன்.