மாயோன் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.
நடிகர் நடிகைகள் :- சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், அர்ஜுன் மணி மாறன், டத்தோ ராதாரவி, அஞ்சனா, கே.எஸ். ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரீஷ் பேராடி, மாரிமுத்து, மற்றும் பலர்.
இயக்கம் :- கிஷோர்.
ஒளிப்பதிவு :- ராம் பிரசாத்.
படத்தொகுப்பு :- ராம் பாண்டியன் – கொண்டலராவ்.
இசை :- இசைஞானி இளையராஜா.
தயாரிப்பு :- டபுள் மீனிங் புரொடக்க்ஷன்.
ரேட்டிங் :- 3.25 / 5.
தொல்லியல் துறை பழங்காலத்து கோயில் பின்னணி புதையல் என தமிழ் திரைப்பட உலகில் இதுவரை இப்படி ஒரு கதை அம்சமுள்ள திரைப்படம் வந்ததில்லை என்று தான் கூறவேண்டும்.
புது விதமான கதையை ஒரு புதுமையான பரபரப்பான திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் கிஷோர்.
மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது.
மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது.
தொல்லியல் துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை ஒன்றில் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ய குழு ஒன்று செல்கின்றது.
அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கே.எஸ் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார்.
ஆனால், அவரது கீழ் வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, கதாநாயகன் சிபி சத்யராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் பழங்கால கிருஷ்ணர் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள்.
அந்த புதையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க கதாநாயகன் சிபி சத்யராஜ், கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள்.
அந்த பழங்கால கிருஷ்ணர் கோயிலை ரகசிய அறையில் புதையல் இருப்பது அந்தக் குழுவுக்கு தெரிய வருகிறது.
ஆனால் அந்த கோவில் ரகசிய அறை ஒன்றில் புதையல் கொள்ளையடிக்க சமூக விரோத கும்பல் ஒன்று திட்டமிடுகிறது.
அந்த கோவிலில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் இரவு அந்தக் கோவிலில் செல்பவர்களுக்கு ஆபத்து எனவும் சித்தபிரமை பிடிக்கும் என அந்த ஊர் மக்களிடையே காலாகாலமாக நம்பிக்கை இருந்து வருகிறது.
தொல்லியல்த்துறையை சேர்ந்த சில அதிகாரிகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டு கோவிலில் உள்ள ரகசிய அறையில் இருக்கும் நகைகளை கொள்ளையடித்தார்களா? இல்லையா? என்பதுதான் மாயோன் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த மாயோன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார்.
தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளர் கனகச்சிதமான கதாபாத்திரத்தில் சிபி சத்யராஜ் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.
எந்த ஒரு பழங்காலப் பொருளையும் அதைப் பார்த்ததுமே அது பற்றிய விவரங்களை சொல்லும் திறமை படைத்தவர்.
தனது கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்திருக்கிறார் சிபி சத்யராஜ்.
இந்த மாயோன் திரைப்படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் சிபி சத்யராஜுக்கு ஜோடி என்பதால் திரைப்படத்தின் கதாநாயகி என தான்யா ரவிச்சந்திரனைச் சொல்லலாம்.
கதாநாயகிக்கென தனி முக்கியத்துவம் எதுவும் இல்லை.
கதாநாயகன் சிபி சத்யராஜ்க்கு பக்கபலமாக நடித்திருக்கிறார் கதாநாயகி தான்யா ரவிச்சந்திரன்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், கமர்ஷியல் கதாநாயகியாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாப்பாத்திரமாக திரைப்படம் முழுவதும் வருகிறார்.
முக்கிய வில்லனாக ஹரிஷ் பெரடி வில்லத்தனமான நடிப்பு மிக அருமை.
இதற்கு முந்தைய திரைப்படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்த திரைப்படத்திலும் செய்திருக்கிறார்.
தொல்லியல் துறை அதிகாரியாக கேஎஸ் ரவிக்குமார் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்திருக்கிறார்.
பகவதி பெருமாள் குணச்சித்திர வேடத்தில் நடித்தாலும் பல இடங்களில் நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.
ஊர் பெரிய மனிதராக ராதாரவி, சக ஆராய்ச்சியாளராக மாரிமுத்து ஆகியோரது கதாபாத்திரங்களும் குறிப்பிடும்படி உள்ளன.
இசைஞானி இளையராஜாவின் இசையில் ‘மாயோனே மணிவண்ணா’ பாடல் ரஞ்சனி, காயத்ரி குரலில் தெய்வீக கானமாய் ஒலிக்கிறது.
இசைஞானி
இளையராஜாவின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிப்பதோடு திரைப்படத்தின் விறுவிறுப்பையும் கூட்டுகிறது.
கோயிலை பல வித கோணங்களில் எடுத்து மிரள வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்.
ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவில் பழங்காலத்து கோவில்களும் கோவில் சார்ந்த இடங்களும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
கோவில் மற்றும் அதை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்.
கோயிலும் அதைச் சுற்றிய இடங்களுமே ஒரு மிரட்சியைக் கொடுக்கிறது.
எது நிஜமான கோயில், எது செட் போடப்பட்ட கோவில் எனத் தெரியாதபடி கலை இயக்குனர் பாலசுபரமணியன் உழைத்திருக்கிறார்.
திரைப்படத்தின் கதைக்களம் அந்த மாயோன் மலை, கிருஷ்ணர் கோயில் ஆகிய இடங்களை மட்டுமே சுற்றி நகர்கிறது.
இருப்பினும் அதற்குள்ளாகவே எந்த அளவிற்கு விறுவிறுப்பைக் கொடுக்க முடியுமா அதைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷோர்.
அருண்மொழி மாணிக்கத்தின் திரைக்கதைக்கு பரபரப்பான காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கும் இயக்குனர் கிஷோர்.
இயக்குநர் கிஷோர் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் முழு திரைப்படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைக்கிறார்.
மொத்தத்தில் ‘மாயோன்’ திரைப்படம் மாயாஜாலம் செய்தவன்.











