அன்யா’ஸ் டுடோரியல் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.

நடிகர் நடிகைகள் :- ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ், பிரமோதினி பம்மி, தர்ஷ், சமீர் மல்லா, சாய் காமாக்ஷி பாஸ்கரலா, மற்றும் பலர்.

இயக்கம் :- பல்லவி கங்கிரெட்டி.

ஒளிப்பதிவு :- விஜய் கே சக்கரவர்த்தி..

படத்தொகுப்பு :- ரவி தேஜா கிரிஜாலா.

இசை :- அரோல் கொரேலி.

தயாரிப்பு :- ஆர்கா மீடியா ஒர்க்ஸ்

ரேட்டிங் :- 3.25 / 5.

 

அந்த காலகட்டங்களில் மக்களின் பொழுதுபோக்க நாடகம், அதன் பிறகு திரைப்படம், பிறகு வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களின் இன்று விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ஓடிடி தளங்கள் உருவாகியிருப்பது சிறப்பு திரைப் படங்கள் மற்றும் இணைய தொடர்கள் பிரபலமடைந்து வருகின்றன.

அப்படி பிரபலமான ஓடிடி தளம்தான் ஆகா ஓடிடி.

ஒரு இணைய தொடராக ஆகா ஒடிடி தளத்தில் இருக்கிற தொடர் தான் ‘அன்யா’ஸ் டுடோரியல்’.

அமானுஷ்ய அம்சம் கதை ஒன்றை எடுத்துக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.

ரெஜினா கசாண்ட்ரா நிவேதிதா சதீஷ் இருவரும் சகோதரிகள்.

தனது அப்பாவை இழந்த அம்மாவின் ஆதரவில் வளர்ந்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேச வேண்டும் என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் நிவேதிதா சதீஷ்.

சமூக வலைதளங்களில் தனது ஒவ்வொரு அசைவையும் மற்றும் மேக்கப் பதிவு செய்து கொண்டிருப்பார் நிவேதிதா சதீஷ்.

இது விஷயம் அக்கா ரெஜினா கசாண்ட்ரா பிடிக்காது.

இப்படிப்பட்ட நிலையில் நிவேதிதா சதீஷ் உடலில் ஒரு தீய சக்தி நுழைந்து கொண்டு பாடு படுத்துகிறது.

தங்கை நிவேதிதா சதீஷ்யை காப்பாற்ற அக்கா ரெஜினா கசாண்ட்ரா என்ன செய்கிறார்? நிவேதிதா சதீஷை தீய சக்தியிடம் இருந்து மீண்டாரா? மீட்க வில்லையா? என்பதுதான் இந்த அன்யா’ஸ் டுடோரியல்’ மீதிகதை.

இந்த அன்யா’ஸ் டுடோரியல்’ இணைய தொடரில் இருவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள்.

இதில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா மற்றொருவர் நிவேதிதா சதீஷ் இந்த இணையத் தொடரில் யார் கதாநாயகி என்று தெரியாத அளவுக்கு இருவரும் சமமாக நடித்திருக்கிறார்கள்.

இநத இணைய தொடரில் அமானுஷ்யங்கள் வருகிற காட்சிகளை விட அமானுஷ்யங்கள் வருகிறது என்று காட்டும் காட்சிகள் அதிகமாக பயன்படுத்துகிறது.

இந்த இணைய தொடரில் ரத்தக்களரியைத் தவிர்த்து இருந்தால் குடும்பத்தினருடன் குழந்தை குட்டிகளுடன் பார்க்கும் படியாக இருந்திருக்கும்.

இயக்குனர் பல்லவி கஞ்சி ரெட்டி ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படிச் சிந்தித்து இயக்கியிருக்கிறார் என்று வியக்க வைக்கிறது.

ரெஜினா கசாண்ட்ரா நிவேதிதா சதீஷ் இருவரையுமே அதிக காட்சிகளில் காட்டுகிறார்கள்.

ரெஜினா கசாண்ட்ரா நிவேதிதா சதீஷ் இருவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

இந்த இணையத்தில் எடுத்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமை.

ஒளிப்பதிவாளர் விஜய் கே சக்கரவர்த்தி அவருடைய லைட்டிங் மற்றும் இரவு நேர காட்சிகள் அனைத்தும் அருமை அருமை.

இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசை மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிக அருமையாக உள்ளது.

ஏழு விதமான அத்தியாயங்களைக் கொண்ட இந்த அன்யா’ஸ் டுடோரியல்’ இணைய தொடரில் ஆரம்பத்தில் இணைய தொடர்களில் உரிய சூத்திரத்தில் கதை நகர்ந்தாலும் போக போக விறுவிறுப்பு கூடி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பல்லவி கஞ்சி ரெட்டி.

மொத்தத்தில் இந்த அன்யா’ஸ் டுடோரியல்’ இனிய தொடர் குடும்பத்தினரை தவிர்த்துத் தனித்தனியாகப் பார்த்து மகிழலாம்.

error: Content is protected !!