டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் V J அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி.
சென்னை 11 ஜூலை 2021
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் V J அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி.
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்றா அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா.
இந்த நிலையில் தற்போது இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
என்னுடைய இதயம் சொல்வதை கேட்டு வேலை செய்ததால் மூளை இதயத்தை விட புத்திசாலி என காட்ட முயற்சி செய்து உள்ளது.
இதனால் மூளை அருகே சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இந்த சமயத்தில் பலருடைய அழைப்புகளை என்னால் ஏற்க முடியாமல் போகலாம்.
என்னுடைய மகள் சாரா என் உடல் நலம் குறித்த அப்டேட்டை வெளியிடுவார்.
இந்த சவாலான அறுவைச் சிகிச்சையில் இருந்து மீண்டு வருவேன் என உறுதியளிக்கிறேன்.
எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CRIQf3qF1t1/?utm_source=ig_web_copy_link