ஜோதி திரை விமர்சனம் ரேட்டிங் :- 3. / 5.

நடிகர் நடிகைகள் :-  வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், மைம் கோபி, நான் சரவணன், சாய் பிரியங்கா ருத், ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ், மற்றும் பலர்.

இயக்கம் :- ஏ. வி. கிருஷ்ண பரமாத்மா.

ஒளிப்பதிவு :- செசி ஜெயா.

படத்தொகுப்பு :- சத்ய மூர்த்தி.

இசை :- ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்.

தயாரிப்பு :- எஸ் பி ஆர் ஸ்டுடியோஸ்.

ரேட்டிங் :- 3. / 5.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடங்களில் நடந்த மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான திரைப்படம்தான் ‘ஜோதி.’

தமிழ் திரைப்பட உலகில் எப்போதாவது ஒருமுறைதான் இப்படி நல்ல கதைகள் வந்திருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் குறிஞ்சி பூ பூப்பது போல்
வந்திருக்கும் திரைப்படம் தான் ஜோதி.

இந்தியா முழுவதும் வருடத்திற்கு சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் அதில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கண்டுபிடிக்க முடியாமல் போவதாகவும் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று இருக்கிறது.

பிறந்த குழந்தை காணாமல் போனால், அந்த தாய் படும் வேதனையை இந்த ஜோதி திரைப்படத்தில் காண்பிருத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதிகமாக நடைபெறும் குழந்தை கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ. வி. கிருஷ்ண பரமாத்மா.

ராட்சசன் பட புகழ் சரவணன் டாக்டராக இவருடைய மனைவியாக ஷீலா ராஜ்குமார் நிறைமாத கர்ப்பிணி நடித்திருக்கிறார்.

இன்னும் சில நாட்களில் ஷீலா ராஜ் குமாருக்கு குழந்தை பிறக்கும் தருவாயில் அன்று இரவு சரவணனுக்கு அவசர அழைப்பு வர, வெளியே சென்று விடுகிறார்.

இந்த சூழ்நிலையில், வீட்டிற்குள் புகுந்துவிடும் மர்ம நபர் ஒருவர், ஷீலா ராஜ்குமாரின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திச் சென்று விடுகிறார்.

மயக்கமுற்ற நிலையில் கிடக்கும் ஷீலா ராஜ்குமாரை ஓடோடி வந்து பார்த்து கதறி அழுகிறார் எதிர்வீட்டில் குடியிருக்கும் கிரீஷா.

உடனே, அந்த ஏரியாவின் சப் காவல்துறை அதிகாரியாக இருக்கும் தனது கணவர் கதாநாயகன் வெற்றிக்கு போன் செய்து உடனே அவரை வரவழைக்க்கிறார்.

கதாநாயகன் வெற்றி, ஷீலா ராஜ்குமாரை உடனடியாக மருத்துவமனையில் செத்து விடுகிறார்.

குழந்தையை கடத்திய அந்த மர்ம நபர் யார் என்று தீவிர விசாரணையில் இறங்குகிறார் கதாநாயகன் வெற்றி.

இறுதியாக குழந்தையை மீட்டனரா.? மீட்கவில்லையா?
கடத்திய மர்ம நபர் யார் என்று கண்டுபிடித்தார்களா.? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ஜோதி திரைபபடத்தின் மீதிக் கதை.

Read Also  கொலையுதிர் காலம் - திரை விமர்சனம்

இந்த ஜோதி திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்துள்ளார்.

கதாநாயகன் வெற்றி, வழக்கமான நடிப்பையே கொடுத்திருந்தாலும் என்று தோன்றுகிறது..

வசனங்கள் உச்சரிப்பில் நன்றாகவே தேறியிருக்கிறார் கதாநாயகன் வெற்றி.

ஜோதியாக வாழ்ந்து அசத்தியிருக்கிறார் ஷீலா ராஜ்குமார்.

நிறைமாத கர்ப்பிணியாக அவர் ஏற்று நடித்த இந்த கதாபாத்திரத்திற்காகவே அவரை வெகுவாகவே பாராட்டியாக வேண்டும்.

அந்த நேரத்தில் அவர் ஆடும் பரதம் நம்மை கண்கலங்க வைக்கிறது.

அழகான தேவதையாகவும் வந்து நடிப்பிலும் ஸ்கோர் செய்துவிட்டு செல்கிறார் கிரீஷ் க்ரூப்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி.

இவரே கதையின் திருப்பு முனையாகவும் இருக்கிறார்.

ஷீலா ராஜ்குமாரின் தம்பியாக நடித்தவர் க்ளைமாக்ஸ் காட்சியில் சண்டைக் காட்சியில் அசத்திய ஹரீஷ்,

அவரின் தம்பி, உள்ளிட்ட அனைவரும் திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலமாகவே நின்றிருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் ஏட்டு கதாபாத்திரத்தில் நடித்த குமரவேலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

அதையும் மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார்..

ஷீலா ராஜ்குமாரின் அப்பாவாக நடித்த மைம் கோபியின் நடிப்பையும் மிக பெரிதாக பாராட்டியே ஆக வேண்டும்.

அப்பா – மகளுக்கான பாசத்தை முதல் பாடலிலே காட்டி நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஏ. வி. கிருஷ்ண பரமாத்மா.

இசையமைப்பாளர்
ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பாடல்களும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு மிக பெரிய பலமாக அமைந்துள்ளது.

செசி ஜெயாவின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.

காட்சிக்கு காட்சி பரபரப்பை ஏற்றியிருக்கிறார் இயக்குனர் ஏ. வி. கிருஷ்ண பரமாத்மா.

யார் குழந்தையை கடத்தியிருப்பார் என்று திரைப்படம் பார்ப்பவர்களை எந்த இடத்திலும் கண்டுபிடித்துவிடாதபடி, மிகவும் தெளிவாக திரைக்கதை அமைத்து கதையை நகர்த்திருக்கிறார் இயக்குனர் ஏ. வி. கிருஷ்ண பரமாத்மா.

மொத்தத்தில் ஜோதி திரைப்படம் குழந்தை கடத்தலை காப்பாற்றும் விழிப்புணர்வு திரைப்படம்.