தி லெஜன்ட் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5/5.

நடிகர் நடிகைகள் :-  அருள் சரவணன், கீர்த்திகா திவாரி, ஊர்வசி ரவுத்துலா, தீபா சங்கர், பிரபு, விவேக், சச்சு, யோகி பாபு, விஜயகுமார், நாசர், சுமன், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், மயில்சாமி, சிங்கம்புலி, தம்பி ராமையா, லதா, ஹரிஷ் பேரடி, வம்சி கிருஷ்ணா, லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், அஷ்வத் குமார், மானஸ்வி, KPY.யோகி, லட்சுமி ராய், அமுதவாணன், யாஷிகா அனந்த, மற்றும் பலர்.

இயக்கம் :-  ஜெடி ஜெர்ரி.

ஒளிப்பதிவு :- ஆர்.வேல்ராஜ்.

படத்தொகுப்பு :- ரூபன்.

இசை :- ஹாரிஸ் ஜெயராஜ்.

தயாரிப்பு :- சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்.

ரேட்டிங் :- 3.5/ 5.

 

தமிழ் திரைப்பட உலகம் ஆரம்பித்து 104 வருடங்களில் எத்தனையோ விதவிதமான நடிகர்கள் மற்றும் நடிகைகள்  திரையுலகம் பார்த்து விட்டது.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ஒரே திரைப்படத்தில் நடித்து விட்டு காணாமல் போனவர்கள் பலர்.

தனது சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை விளம்பரங்களில் தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து நடனமாடி, விளம்பரப் திரைப்படங்களை எடுத்து அதன் மூலம் மக்கள் மத்தியில் ஓரளவிற்குப் பிரபலமானவர் அருள் சரவணன்.

எப்படியாப்பட்ட விமர்சனம் வந்தாலும் அதைப் பற்றிக் கலலைப்படாமல் தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகனாக நடித்தே தீருவேன் என்று ஒரே முடிவில் இருந்த அவர் இந்த தி லெஜண்ட் திரைப்படத்தைத் தயாரித்து கதாநாயகனாக நடித்தும் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகி இருக்கிறார் லெஜன்ட் அருள் சரவணன்.

தமிழ் திரைப்பட உலகில் இருக்கும் மூத்த நட்சத்திரங்கள் செய்யாத ஒரு காரியத்தை லெஜன்ட் அருள் சரவணன் அவர்கள் அவருடைய முதல் திரைப்படத்தை ஜந்து மொழிகளில் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியிட்டு நினைத்ததை சாதித்து விட்டார்

இயக்குநர்கள் ஜெடி ஜொரி தமிழ் திரைப்படம் உலகில் இரட்டை இயக்குனர்கள் இவர்கள் இயக்கிய முதல் திரைப்படம் அஜித் குமார் சியான் விக்ரம் நடிப்பில் 1997 வெளிவந்த உல்லாசம் அதன் பின் அவர்களுடைய இரண்டாவது திரைப்படம் 2003 இல் வெளிவந்த விசில் திரைப்படம் இவருடைய மூன்றாவது திரைப்படமான அருள் சரவணன் நடிக்கும் தி லெஜன்ட் திரைப்படம் இவர்கள் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

விஞ்ஞானியாக இருக்கும் கதாநாயகன் அருள் சரவணன், பல சாதனைகளை செய்து உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளை அசரவைக்கிறார்.

இந்தியாவில் சர்க்கரை வியாதி உள்ள நோயளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறார்கள்.

அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கும் சக்கரை நோயாளிகளின் வீரியத்தைக் குறைத்தே ஆக வேண்டும் என முடிவு செய்கிறார்.

Read Also  வேலன் திரை விமர்சனம் ரேட்டிங் –2.75 /5

சர்க்கரை நோய்க்கு பாதிக்கப்பட்டு இன்சுலின் ஊசியை போட்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர்.

வெளிநாட்டில் தனது படிப்பையும் ஆராய்ச்சியும் முடித்துவிட்டு தனது சொந்த ஊர் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என கதாநாயகன் அருள் சரவணன் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புகிறார்.

அவருடைய பள்ளியில் ஒன்றாக படித்த நண்பன் ரோபோ சங்கர் மற்றும் மனைவி மகன் மகள் அனைவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கதாநாயகன் அருள் சரவணன்,
தனது தாத்தா உருவாக்கிய கல்லூரியை எடுத்து நடத்துகின்றார.

இந்நிலையில் கதாநாயகன் அருள் சரவணனின் பள்ளியில் படித்த நண்பரான ரோபோ சங்கர் சர்க்கரை வியாதியால் இறந்து விடுகிறார்.

அதனால் தனது நண்பன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனமுடைந்த கதாநாயகன் அருள் சரவணன்.

சர்க்கரை சர்க்கரை வியாதியால் அவதிப்படும் தனது நாட்டு மக்களுக்காக சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் களம் இறங்குகிறார் கதாநாயகன் அருள் சரவணன்.

பெரிய மருந்து கம்பெனி நடத்தும் மெடிக்கல் மாபியாவின தலைவனாக சுமன் கதாநாயகன் அருள் சரவணனுக்கு எதிராக களம் இறங்குகிறார்.

கதாநாயகன் அருள் சரவணனுக்கு மெடிக்கல் மாபியாவின தலைவனாக சுமனால் பல விதமான தடைகளும் இன்னல்களும் வருகிறது.

இறுதியில் அருள் சரவணனுக்கு வந்த பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை கடந்து சர்க்கரை வியாதிக்கு மாற்று மருந்தை கதாநாயகன் அருள சரவணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த தி லெஜன்ட் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த தி லெஜன்ட் திரைப்படத்தில் அருள் சரவணன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அறிமுக தி லெஜன்ட் முதல் திரைப்படத்திலேயே தமிழக மக்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார் கதாநாயகன் அருள் சரவணன்.

ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்திலும் தனது முயற்சியை மிக அதிகமாக கொடுத்துள்ளார்.

குறிப்பாக சண்டை காட்சியில் மிகப்பெரிய மாஸ் காண்பித்துள்ளார்.

கதாநாயகன் அருள் சரவணனுக்கு ஜோடியாக நடித்து இருக்கும், கீத்திகா திவாரி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

கவர்ச்சியான வில்லியாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி
இருக்கிறார் ஊர்வசி.

தி லெஜன்ட் திரைப்படம் தான் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் அவர்களுக்கு நடித்த கடைசி திரைப்படம்.

நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சின்ன கலைவாணர் விவேக்.

வழக்கமான வில்லத்தனத்தை கொடுத்து இருக்கிறார் சுமன்.

ரோபோ சங்கர் மற்றும் தேவதர்ஷினி இருவருடைய நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

கதாநாயகன் அருள் சரவணனின் அண்ணனாக வரும் நடிகர் பிரபு, அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அப்பாவாக வரும் விஜயகுமார், விஞ்ஞானி வரும் நாசர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Read Also  கே.ஜி.எப் 2 திரை விமர்சனம் ரேட்டிங் – 4.5 /5

சிறிது நேரமே திரைப்படத்தில் வந்தாலும் மனதில் யோகி பாபு பதிந்திருக்கிறார்.

விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை, கலர்ஃபுல்லான பாடல்கள் திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் மனதை தொடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு முன்பு வெளிவந்த சில வெற்றி பெற்ற திரைப்படங்களில் இருந்து சில பாடல்களை காப்பி அடித்திருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லான லைட்டிங் திரைப்படத்தை கலர்ஃபுல்லாக காண்பித்து இருக்கிறார்.

சண்டை இயக்குனர் அனல் அரசின் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் திரைப்படத்திற்கு பலம்.

மெடிக்கல் மாஃபியா கதையை வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், இந்த திரைப்படம் அதிலும் தனித்துவமாக திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜேடி – ஜெரி.

மொத்தத்தில் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் தமிழனின் வெற்றி.