பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பினால் காலமானார்.

சென்னை 16 ஆகஸ்ட் 2022  பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பினால் காலமானார்.

தமிழ் திரைப்பட உலகில் ஒரு பத்திரிக்கையாளராகவும்
திரைப்பட விமர்சகரகவும தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக் காட்டுவதும் திரைப்பட துறையில் எளிமையான விஷயம் அல்ல.

அந்த வகையில் சிறந்த பத்திரிக்கையாளராகவும் சிறந்த திரைப்பட விமர்சகரகவும மற்றும் வி.ஜே என தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி சமூக வலைத்தளங்களில் தனக்கென்று பல கோடி ரசிகர்களை வைத்திருப்பவர் வி.ஜே கௌஷிக்.

இவர் கலாட்டா என்கின்ற தனியார் இணையதளத்தில் விஜேவாக பணியாற்றி வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு வயது 35 ஆகும் நிலையில் திடீரென 15 ஆகஸ்ட் 2022 அன்று மதியம் 12 மணி அளவில் வி.ஜே கௌஷிக் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பத்திரிக்கையாளர்களை மட்டும் இன்றி திரையுலகில் உள்ள பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இவர் சில மணி நேரத்திற்கு முன்பு கூட சீதாராமம் திரைப்படம் மற்றும் பிரபாஸின் சலார் திரைப்படத்தின் அப்டேட் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மரணம் குறித்து அறிந்த நடிகர் கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/galattadotcom/status/1559201039361773568?t=sE6DBNSpA3LU7hFOWzNjxQ&s=19

https://twitter.com/offl_Lawrence/status/1559228977230667777?t=cr31ho4Qev8lzI7MEMSlyQ&s=19

https://twitter.com/VelsFilmIntl/status/1559223428992753664?t=sDR1NWwD47OGFl5T40rKDQ&s=19

error: Content is protected !!