மேதகு 2 திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.

நடிகர் நடிகைகள் :-  கௌரிசங்கர், நாசர்,மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- இரா. கோ யோகேந்திரன்.

ஒளிப்பதிவு :- வினோத் ராஜேந்திரன்.

படத்தொகுப்பு :- ஆதித்யா முத்தமிழ் மாறன்.

இசை :- பிரவின் குமார்.

தயாரிப்பு :- ‘மேதகு திணைக்களம்.

ரேட்டிங் :- 3.5 / 5.

கடந்த 2021 ஆம் வருடம் ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி வைத்து உருவான மேதகு திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.

அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படக்குழுவினர் மேதகு இரண்டாம் பாகத்தையும் தயாரித்திருக்கிறார்கள்.

இரண்டாம் பாகத்தை மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2 தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் சிலவற்றை கூறியபோதும், அதன் தொடர்ச்சியாக மேதகு 2 உருவாகியுள்ளது.

அனைத்து கதாபாத்திரங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இரா. கோ யோகேந்திரன்..

ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த மேதகு திரைப்படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார் அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு மேற்பார்வையில் செயல்பட்டு இந்த மேதகு திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த மேதகு திரைப்படத்திற்கு பல விதமான எதிர்ப்புகள் இருந்தாலும் பலருடைய ஆதரவுகள் உலகெங்கும் வந்த வண்ணம் இருக்கிறது.

இலங்கையில் உள்ள சிங்கள  அரசால் மற்றும் ராணுவத்தால் சிங்கள மக்களாலும் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப் பட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழீழ  மக்களின்  உரிமையை  மீட்கவும், தமிழர்களையும் தமிழ் பெண்களின்  மனம் காக்கவும் , தனி  தமிழீழம்  அமைக்கப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் இந்த தமிழீழ விடுதலை புலிகள்  என்ற  இயக்கத்தை தொடங்கினார் தலைவர் பிரபாகரன்.

தமிழீழ விடுதலை புலிகள்  என்ற  இயக்கத்தில் தமிழ் இளைஞர்களை போராளிகளாக இணைத்து போர் பயிற்சி அளித்து சிங்கள அரசுக்கு எதிராக போராடினார் தமிழீழ தலைவர் பிரபாகரன்.

இந்த இயக்கம் உருவானது எப்படி. அதன் நோக்கம்  என்ன வாக இருந்தது.

அதற்கு தமிழக மக்களும், சில தமிழ்க தலைவர்களும் எப்படி ஆதரவு தெரிவித்தார்கள் போன்ற வரலாற்று சம்பவங்களை மேதகு 2 திரைப்படத்தில் விளக்குகிறது.

கதாநாயகனாக தமிழீழ தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார்.

தமிழீழ தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிகவும் அருமையாக நடிப்பை கொடுத்திருக்கிறார்

கெளரி சங்கரின் முக அமைப்பு சாயலாக தமிழீழ தலைவர் பிரபாகரன் போன்று காட்சியளித்திருக்கிறார்.

அமைதியான  அதேசமயம் அழுத்தமான நடிப்பால்  மிளிர்கிறார்.

கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

எவ்விதமான சமரசமும் இல்லாமல், கட்சித் தலைவர்கள் தலைவர் பிரபாகரனை பற்றி நினைத்திருந்தது, அவர்கள் பேசியதை வெளிப்படையாக கூறி நிஜத்தின் உண்மையை காட்சிப்படுத்தி இயக்குனருக்கு பெரும் பாராட்டுகள் கொடுக்கலாம்.

இலங்கை போரைப் பற்றியும் பிரபாகரனின் வாழ்க்கை பற்றியும் பல திரைப்படங்கள் இதற்கு முன் வந்திருக்கிறது.

இந்த திரைப்படம் அதிலிருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது.

இசையமைப்பாளர் பிரவின் குமாரின் இசையில் பின்னணி இசை திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன் ஒளிப்பதிவு உண்மையாலுமே இலங்கைக்கு சென்று வந்தது போல் இருக்கிறது.

படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், என அவரவர்கள் தங்களது பணிகளை மிகவும் செவ்வினை செய்து முடித்திருக்கிறார்கள்.

தமிழீழ தலைவர் பிரபாகரன் பற்றிய பல திரைப்படங்களில் கூறப்படாத சில அரசியல் நிகழ்வுகளையும்,  அரசியல் வாதிகளின் எண்ணப் போக்கையும் இந்த மேதகு 2 திரைப்படத்தில் கூறியிருக்கிறார்கள்

தமிழீழ தலைவர் பிரபாகரன் அவருடைய வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்காகவே இந்த மேதகு 2 திரைப்படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

மொத்தத்தில் மேதகு 2 திரைப்படம் வீர தமிழனின் உணர்வுகள்.

தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.