திரையரங்குகள் திறக்கப்படாததால் முடங்கி கிடக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்.: முழு விவரம் இதோ

சென்னை 30 மே 2021

திரையரங்குகள் திறக்கப் படாததால் முடங்கி கிடக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்.: முழு விவரம் இதோ

இந்த வருடம் பொங்கல் சமயத்தில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ & சிலம்பரசன் டிஆர் ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியானது.

இவை இரண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை குடும்பம் குடும்பமாக வரவழைத்தது.

அதை அடுத்து சட்டமன்ற தேர்தல் பரபரப்பில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகவில்லை.

இதனை அடுத்து ஏப்ரல் மாதத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நடிகர் கார்த்தி ‘சுல்தான்’ நடித்த உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.

கொரோனா வைரஸ் நோய் தொற்று உச்சத்தை தொட ஆரம்பித்த உடன் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு தடை வந்தது.

அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கில் தளர்வுகள் வந்தாலும் திரையரங்குகள் திறப்பது என்பது இப்போது நடக்காத காரியம்தான்.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலேயே திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

இந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

அந்த திரைப்படங்கள் விவரம் வருமாறு…

காகித பூக்கள், உழைக்கும் கரங்கள், சினிமா கனவுகள், இளஞ்ஜோடிகள், இது கதை அல்ல நிஜம், வீரமகன், இளவரசி, வைரி, சில்லாட்ட, பூதமங்கலம் போஸ்ட் , டம்மி ஜோக்கர், பிரம்மபுரி, வாழ்க ஜனநாயகம், இரவா இரவு , உத்ரா, கபாலி டாக்கீஸ், எல்லைக்காவலன், பிறர்தர வாரா, சின்ன பண்ணை பெரிய பண்ணை, நெஞ்சாக்கூட்டில், வெற்றித் திருமகன், ஆகிய திரைப்படங்கள் உட்பட 40 திரைப்படங்கள் திரையரங்குகள் திறக்கும் நாளை எதிர் நோக்கி காத்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பிரச்சினை முடிந்த உடன் திரைப்படங்களை வெளியீடு செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து பேச வேண்டும் என்று திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.

error: Content is protected !!