நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் இன்று அதிகாலை காலமானார்.
சென்னை 02 ஜூன் 2021
நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் இன்று அதிகாலை காலமானார்.
களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி மற்றும் கன்னட படங்களில் நடித்தவரும், மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை, மற்றும் கன்னட படங்களை தயாரித்தவருமான ஜி.ஆர். கோல்டு பிலிம்ஸ் ஜி.ஆர் என்கிற ஜி.ராமச்சந்திரன் வயது 73 உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
சமீபத்தில் தான் அவரது மனைவி தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம்.
அவருக்கு சிவகுமார், சாமி குமார் என்கிற இரு மகன்கள் உள்ளனர்.
அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.30 மணியளவில் no.145, பூந்தமல்லி ஹை ரோடு, வேலப்பன் சாவடி, சென்னை – 77
வீட்டிலிருந்து புறப்பட்டு மாங்கட்டில் உள்ள பண்ணை தோட்டத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.