Monday, September 27
Shadow

அண்ணாத்த’ திரைப்படத்தின் பேனருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்..; அருவருப்பான செயல் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரப்பில் அறிக்கை.

சென்னை 15 செப்டம்பர் 2021 அண்ணாத்த’ திரைப்படத்தின் பேனருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்..; அருவருப்பான செயல் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரப்பில் அறிக்கை.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பொது வெளியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து ரஜினி ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்தனர்.

இது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது.

இந்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதால் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் கொடுத்தனர்.்

மேலும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டித்தது.

இந்த நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்..

அண்ணாத்த திரைப்படத்தின் போஸ்டர் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

CLOSE
CLOSE