பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் நேற்றிரவு காலமானார்.

பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் நேற்றிரவு காலமானார்.!

சென்னை 09 ஆகஸ்ட் 2023 இயக்குநர் பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்து மலையாளத்தில் வெளியான ‘ஆ நேரம் அல்ப தூரம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவர் தமிழில் ரங்கூன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வெந்து தணிந்தது காடு, சுபாஷ், ஜனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமானார்.

தொடர்ந்து, எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய திரைப்படங்களையும் இயக்குனர் சித்திக் இயக்கியுள்ளார்.

இதனிடையே, இயக்குநர் சித்திக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் சித்திக் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார்.

அவரது மறைவு மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!