பினிக்ஸ் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சூர்யா சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், மூனார் ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அபி நக்ஷத்ரா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அனல் அரசு.
ஒளிப்பதிவாளர் :- வேல்ராஜ்.
படத்தொகுப்பாளர் :- சாம் சி எஸ்.
இசையமைப்பாளர் :- சாம் சிஎஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஏ.கே. பிரேவ்மேன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- ராஜலட்சுமி அனல் அரசு.
ரேட்டிங் :- 3.5/5.
தன்னுடைய அண்ணனை கொடூரமான முறையில் கொலை செய்த எம்.எல்.ஏ சம்பத்தை பழிக்கு பழி வாங்குவதற்காக கதாநாயகன் சூர்யா சேதுபதி, பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் கொடூரமாக வெட்டி கொலை செய்கிறார்.
ஏரியா எம்எல்ஏவை கொடூரமாக வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக கதாநாயகன் சூர்யா சேதுபதியை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் (அரசு கூர்நோக்கு இல்லம்) அடைக்கப்படுகிறார்.
கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டவர் அந்த ஏரியா எல் எல் ஏ என்பதால் அந்த ஏரியாவே பரபரப்பாக இருக்கிறது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு இருக்கும் கதாநாயகன் சூர்யா சேதுபதியை
கொடூரமான முறையில் கணவரை வெட்டி கொலை செய்யப்பட்ட எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்ஷ்மி சரத்குமார், தன்னுடைய ஆட்களை வைத்து சிறைக்குள் அனுப்பி கதாநாயகன் சூர்யா சேதுபதியை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்ஷ்மி சரத்குமார், அனுப்பி வைத்த ஆட்கள் அனைவரையும் அடித்து துவைத்து அனுப்புகிறார்.
மீண்டும் மீண்டும் கொலை வெறி கொண்டு கதாநாயகன் சூர்யா சேதுபதியை. எம் எல் ஏ-வின் ஆட்கள் அனைவரும்
கொலை செய்வதற்கு துடிக்கிறார்கள்.
யார் இந்த கதாநாயகன் சூர்யா சேதுபதி.? இவர் எதற்காக எம் எல் ஏ-வை கொலை செய்தார்.? கதாநாயகன் சூர்யா சேதுபதிக்கும் எம் எல் ஏ சம்பத்திற்கும் என்ன தொடர்பு .? என்பதுதான் இந்த பினிக்ஸ் வீழான் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பினிக்ஸ் வீழான் திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாசேதுபதி நடித்திருக்கிறார்.
அறிமுகம்ஆன முதல் திரைப்படத்திலேயே சூர்யா சேதுபதி முத்திரை பதிக்கும் வகையில் நடிப்பைக் கொடுத்து மிரட்டியிருக்கிறார்
கதாநாயகன் சூர்யா சேதுபதி. தனது முழு நடிப்பையும் ஆக்ஷன் ஒன்றிலேயே கவனம் செலுத்தி, அதனை மிரட்டலாக ஆக்ஷன் காட்சிகளை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் சூர்யா சேதுபதியின் நடிப்பில் சின்ன சிறு குறைகள் இருந்தாலும், சண்டை காட்சிகளில் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து வெறி கொண்டு நடித்திருக்கிறார்.
காக்காமுட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ், இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்னேஷ் உடல் உழைப்பை அதிகமாகவே கொடுத்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
இந்த பினிக்ஸ் வீழான் திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த, வரலக்ஷ்மி சரத்குமார், முத்துக்குமார், ஹரீஷ் உத்தமன், சம்பத், நக்ஷத்ரா, தேவதர்ஷினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசை மற்றும் இடைவேளைக்கு பின் குத்து பாடல் என திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
அதிகார உச்சவரம்பு எதுவரை செல்லும் என்பதை கரெண்ட் அரசியல் சாயம் கொண்டு திரைப்படத்தின் கதையை நன்றாகவே இயக்கியிருக்கிறார்
இயக்குனர் அனல் அரசு.
சிறைச்சாலை சண்டைக் காட்சி என தனக்கான ஸ்டண்ட் யூனிக் காட்சிகளை மிகத் தரமாக திரைப்படத்தில் சிறந்த சண்டை பயிற்சியாளர் எனவும் இந்த திரைப்படத்தில் சிறந்த இயக்குனராகவும் பெயரெடுத்திருக்கிறார் இயக்குனர் அனல் அரசு.
ஃபீனிக்ஸ் விழாக், சிறப்பான தரமான ஆக்ஷன் திரைப்படமாக அமைந்திருக்கிறது