ராஜாகிளி திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- தம்பி ராமையா, சமுத்திரக்கனி, தீபா, பிரவீன் குமார் ஜி, டேனியல் அன்னி போப், பழ கருப்பையா, வெற்றிக்குமரன், அருள் தாஸ், சுவேதா ஷ்ரிம்டன், ரேஷ்மா பசுபலேட்டி, சுபா, வி.ஜே. ஆண்ட்ரூஸ், மாலிக், கிங் காங்
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- உமாபதி ராமையா.

ஒளிப்பதிவாளர் :- கேதார்நாத் – கோபிநாத்.

படத்தொகுப்பாளர் :- சுதர்சன் ஆர்.

இசையமைப்பாளர் :- தம்பி ராமையா.

தயாரிப்பு நிறுவனம் :- ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- சுரேஷ் காமாட்சி.

ரேட்டிங்:- 3.5./5.

சமுத்திரக்கனி அன்னை மடி என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஒரு இல்லத்தை நடத்தி வருகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், இருக்கும் கதாநாயகன் தம்பி ராமையாவை அரவணைத்து தனது அன்னை மடி இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார் சமுத்திரக்கனி.

கதாநாயகன் தம்பி ராமையா வைத்திருக்கும் ஒரு மூட்டையில் டைரி ஒன்று இருக்க அதை எடுத்து சமுத்திரக்கனி படிக்கும்போது தான் தெரிகிறது, இவர் பல தொழில்களுக்கு சொந்தக்காரரான பெரும் செல்வந்தரான மிகப்பெரிய தொழில் அதிபர் முருகப்பன் இவர் தான், என்பது  தெரிய வருகிறது.

பல தொழில்களுக்கு சொந்தக்காரரான பெரும் செல்வந்தரான மிகப்பெரிய தொழில் அதிபர் முருகப்பன் யார்?, இந்த நிலைக்கு வந்த காரணம் என்ன? என்பதுதான் இந்த ‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ராஜா கிளி திரைப்படத்தில் கதையின் நாயகனாக தம்பி ராமையா நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் தம்பி ராமையா, மனநலம் பாதிக்கப்பட்டவராக அழுக்கு படிந்த கதாபாத்திரத்தை தனது முகம் முழுவதும் தாடியும் முதிர்ச்சியான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார்

ஆனால், மிகப்பெரிய தொழில் அதிபர் முருகப்பன் என்ற செல்வந்தராக அறிமுகமாகும் காட்சிகளில் அவருடைய நடை, உடை, நடிப்பு என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டி இருக்கிறார்.

சமுத்திரக்கனிக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும், முருகப்பன் யார்? என்பதை திரைப்படம் பார்க்கும் பர்வையாளர்களுக்கு விவரித்து, இறுதியில் அவருக்காக குரல் கொடுக்கும் நல்ல மனிதராக திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

கதையின் நாயகன் தம்பி ராமையாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா, கணவன் மீது சந்தேகத்தையும் வளர்த்துக் கொண்டு தங்களது நிம்மதியை தொலைத்து மற்றவர்களின் வாழ்க்கையையும் ஆட்டம் காண செய்யும் மனைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் அதிரடியான நடிப்பை கொடுத்திருக்கிறார்

கதையின் நாயகன் தம்பி ராமையாவின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன்குமார் ஜி திரைப்படத்தின் முதல் பாதியில் தந்தை மீது பாசம் கொண்டு பால்வாடியும் முகம் போல் இருந்த இரண்டாம் பாதியில் சொத்தை எப்படி ஆட்டையை போடுவது தந்தை திருப்பி வரும்போது பசுந்தோல் போர்த்திய புலியாக மாறுவது என மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதையின் நாயகன் தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக நடித்திருக்கும் சுவேதா ஷ்ரிம்டன், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்தாஸ், சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பழ கருப்பையா, டேனியல் அனி போப், ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் – கோபிநாத் ஒளிப்பதிவு, முருகப்பனின் பணக்கார வாழ்க்கையையும், மிக அருமையாகவும் கலர்ஃபுல்லாகவும் பசி மிகுந்த வாழ்க்கையையும் எதார்த்தமாகவும் மிக அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் தம்பி ராமையாவின் இசையில் பாடல்கள் அருமையாக உள்ளது.

பின்னணி இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் பணி சிறப்பாக உள்ளது.

தம்பி ராமையா, உண்மை சம்பவம் ஒன்றை பின்னணியாகக் கொண்டு கதை மற்றும் திரைக்கதை மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

பெண்கள் மீது சபலம் படும் மனிதனை எப்படி வாழ்க்கையில் சறுக்கலை சந்திக்கிறார்கள் என்பதையும், பெண்களின் பெண் புத்தி பின் புத்தி என அவசர புத்தியால் சிறந்த மனிதர்களில் புனிதர்கள் எப்படி குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள், என்பதையும் திரைப்பட பாணியில் சொன்னாலும், மிகவும் உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ் மூலம் ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாடம் புகட்டியிருக்கிறார் இயக்குநர் உமாபதி ராமையா.

மொத்தத்தில், – ‘ராஜா கிளி’  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைபடம்.