இன்றைய ராசிபலன்கள் 20/09/2024
இன்றைய ராசிபலன்கள்.
20-09-2024 வெள்ளிக்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.
தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, புரட்டாசி 4
நாள் – சம நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ திருதியை – Sep 20 12:40 AM – Sep 20 09:15 PM
கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Sep 20 09:15 PM – Sep 21 06:14 PM
நட்சத்திரம்.
அஸ்வினி – Sep 20 05:15 AM – Sep 21 02:42 AM
பரணி – Sep 21 02:42 AM – Sep 22 12:36 AM
கரணம்.
வனசை – Sep 20 12:40 AM – Sep 20 10:55 AM
பத்திரை – Sep 20 10:55 AM – Sep 20 09:15 PM
பவம் – Sep 20 09:15 PM – Sep 21 07:41 AM
யோகம்.
துருவம் – Sep 19 07:18 PM – Sep 20 03:18 PM
வியாகாதம் – Sep 20 03:18 PM – Sep 21 11:36 AM
வாரம்.
வெள்ளிக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.
சூரியோதயம் – 6:12 AM
சூரியஸ்தமம் – 6:13 PM
சந்திரௌதயம் – Sep 20 8:13 PM
சந்திராஸ்தமனம் – Sep 21 8:59 AM
அசுபமான காலம்.
இராகு – 10:43 AM – 12:13 PM
எமகண்டம் – 3:13 PM – 4:43 PM
குளிகை – 7:42 AM – 9:12 AM
துரமுஹுர்த்தம் – 08:36 AM – 09:24 AM, 12:37 PM – 01:25 PM
தியாஜ்யம் – 11:08 PM – 12:34 AM
சுபமான காலம்.
அபிஜித் காலம் – 11:49 AM – 12:37 PM
அமிர்த காலம் – 08:16 PM – 09:42 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM
ஆனந்ததி யோகம்.
வஜ்ரம் Upto – 02:42 AM
முத்தகம்
வாரசூலை.
சூலம் – West
பரிகாரம் – வெல்லம்
வெள்ளிக்கிழமை ஹோரை.
காலை
06:00 – 07:00 – சுக் – சுபம்
07:00 – 08:00 – புத – சுபம்
08:00 – 09:00 – சந் – சுபம்
09:00 – 10:00 – சனி – அசுபம்
10:00 – 11:00 – குரு – சுபம்
11:00 – 12:00 – செவ் – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சூரி – அசுபம்
01:00 – 02:00 – சுக் – சுபம்
02:00 – 03:00 – புத – சுபம்
மாலை
03:00 – 04:00 – சந் – சுபம்
04:00 – 05:00 – சனி – அசுபம்
05:00 – 06:00 – குரு – சுபம்
06:00 – 07:00 – செவ் – அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
20-09-2024 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
மற்றவர்கள் செயல்களில் தலையிடுவதை குறைக்கவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது அமைதியை கொடுக்கும். நினைத்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். இனம் புரியாத புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனிறம்
அஸ்வினி : செயல்களில் கவனம்.
பரணி : அலைச்சல்கள் ஏற்படும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரிஷபம்
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் நீங்கும். பயனற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இலக்குகளை நோக்கி செயல்களில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
கிருத்திகை : லாபம் கிடைக்கும்.
ரோகிணி : அலைச்சல்களை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : குழப்பங்கள் மறையும்.
மிதுனம்
தொழில் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்கள் மூலம் இனிமையான அனுபவங்கள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : அனுபவங்கள் ஏற்படும்.
கடகம்
வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியத்தில் சில மாற்றமான அனுபவம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : சூல்நிலையறிந்து செயல்படவும்.
சிம்மம்
அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசு துறைகளில் அனுகூலம் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : மதிப்புகள் மேம்படும்.
பூரம் : தேடல்கள் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
கன்னி
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பணி நிமிர்த்தமான கோப்புகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். இனணயம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நில நிறம்
உத்திரம் : சேமிப்புகள் குறையும்.
அஸ்தம் : குழப்பமான நாள்.
சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
துலாம்
பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். பிறமொழி மக்களிடம் அனுசரித்து செல்லவும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
சித்திரை : சந்திப்புகள் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : ஏற்ற இறக்கமான நாள்.
விருச்சிகம்
பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். தொல்லை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
விசாகம் : பொறுப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
தனுசு
வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : திருப்பங்கள் உண்டாகும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் காணப்படும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : தேடல் அதிகரிக்கும்.
கும்பம்
திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய வீடு நிமித்தமான கடன் உதவிகள் சாதகமாகும். அரசியல் துறைகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
சதயம் : பணிகளில் கவனம்
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
மீனம்
திடீர் பயணங்களால் மேன்மை ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். வியாபார பணிகளில் இருந்த மந்த தன்மைகள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற வாக்குறுதிகளை குறைப்பது நல்லது. சமூகப் பணிகளில் கொள்கை பிடிப்பு தன்மை மேம்படும். கணிதம் சார்ந்த துறையில் ஆர்வம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : ஆர்வம் பிறக்கும்.