’சல்லியர்கள்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சத்யாதேவி, எஸ். கருணாஸ், திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சௌந்தரராஜன், மோகன், சந்தோஷ். மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- டி.கிட்டு.
ஒளிப்பதிவாளர் :- சிபி சதாசிவம்.
படத்தொகுப்பாளர் :- சி.எம். இளங்கோவன்.
இசையமைப்பாளர் :- கென் & ஈஸ்வர்.
தயாரிப்பு நிறுவனம் :- இந்தியன் சினேவே.
தயாரிப்பாளர் :- எஸ்.கருணாஸ் & பி.கரிகாலன், சாத்தனூர் சிவா, நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார்.
ரேட்டிங் :- 3.5./5.
ஈழ தமிழர்களின், விடுதலைக்காக போராடிய தமிழ் ஈழத்தை சேர்ந்த போராளிகளும் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம், அவற்றை பல வழிகளில் இன்னொரு கதைகளாக பலவிதமான திரைப்படங்களாக இந்த உலகிற்கு வந்திருக்கிறது.
ஈழத் தமிழர்கள் பாதுகாப்பிற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எப்படி இயங்கியது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பதுங்கு குழி மருத்துவமனை மற்றும் உயிரை துச்சமாக நினைத்து அதில் பணியாற்றிய மருத்துவர்களின் மனித நேயத்தையும் மனிதத்தன்மையும், சிங்கள ராணுவத்தின் மிருகத்தன்மையையும் எடுத்துச் சொல்லும் திரைப்படம் தான் இந்த ‘சல்லியர்கள்’.
சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிடும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் புலிகள் அமைப்பினர் போர் நடக்கும் இடங்களில் காயமடைந்தால், அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக போர்க்களத்தில் பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த பதுங்கு குழி மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவரான கதாநாயகி சத்யதேவி, சரியான உணவு, உறக்கம் இல்லாமல் , பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
பெண் மருத்துவரான கதாநாயகி சத்யதேவி, உதவி செய்வதற்காக பதுங்கு குழி மருத்துவமனைக்கு மருத்துவர் மகேந்திரனை தலைமை மருத்துவமனையில் இருந்து பணிபுரிய அனுப்பப்படுகிறார்.
தமிழ் விடுதலைபுலிகள் அமைப்புகளின் பதுங்கு குழியில் உள்ள மருத்துவ குழுவை அழித்தால், விடுதலைபுலிகளை எளிதில் வீழ்த்தி விடலாம் என சிங்கள ராணுவம், திட்டம் போடுகிறது.
இந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்த மருத்துவர்கள், போராளிகளாக இருந்தாலும் சரி, சிங்கள ராணுவத்தில் உள்ள எதிரிகளாக இருந்தாலும் சரி, உயிருக்காக போராடுபவர்களை யாராக இருந்தாலும் உயிரை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பணயம் வைத்து பணிபுரிகிறார்கள்.
விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்த மருத்துவர்களின் பதுங்க குழிகளை சிங்கள ராணுவத்தினர் அழித்து விட்டார்களா? அழித்து விடவில்லையா? என்பதுதான் இந்த ‘சல்லியர்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘சல்லியர்கள்’ திரைப்படத்தில் கதாநாயகியாக சத்யதேவி, நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சத்யதேவி, மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சத்யதேவி, தமிழ் ஈழ போராளி மருத்துவர்களை நமது கண் முன் நிறுத்தியிருக்கிறார்.
மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கதாபாத்திரத்திலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார்.
நடிகர் மகேந்திரன் என்ற அடையாளம் எந்த பல காட்சிகளிலும் தெரியாதவாறு, அவரது கதாபாத்திரத்திற்கு மாபெரும் பலமாக அமைந்திருக்கிறார்.
கதாநாயகியின் தந்தை மதிழயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேது கருணாஸ், பேசும் வசனங்கள் அனைத்தும், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் மனதை உருக வைத்திருக்கிறார்.
சிங்கள ராணுவ அதிகாரிகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
காதல் ஜோடிகளாக அறிமுகமாகி மற்றொரு ஈழ போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகராஜ் – பிரியலயா திரைப்படம் பார்க்கணும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்
ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் மற்றும் லொக்கேஷன்கள் அனைத்தும் தமிழ் ஈழத்தில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.
இசையமைப்பாளர் கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோரது இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
ஈழ தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் விடுதலை போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத விஷயங்களை மிக தெள்ளத் தெளிவாக சொல்லியிருப்பதோடு, இனப் பாகுபாடின்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்குடன் செயல்படும் தமிழ் ஈழ போராளி மருத்துவர்களின் வாழ்வியலை மிக அழுத்தமாக படைப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர் டி.கிட்டு.
“நாம் நம் உயிரை விதையாக விதைக்கிறோம். ஒரு நாள் அது வெடித்து சுதந்திரமாக நிற்கும்” இயக்குநர் டி.கிட்டு, பல கூர்மையான மற்றும் உணர்வுப்பூர்வமான வசனங்கள் மூலம் திரைப்பட ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில், ‘சல்லியர்கள்’ திரைப்படம் தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய படைப்பு.











