’மதராஸி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :-  சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லாரக்கல், விக்ராந்த், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஏ.ஆர். முருகதாஸ்.

ஒளிப்பதிவாளர் :- சுதீப் எலமன்.

படத்தொகுப்பாளர் :-  ஸ்ரீகர் பிரசாத்.

இசையமைப்பாளர் :- அனிருத்

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ்.

தயாரிப்பாளர் :-  லக்ஷ்மி மூவிஸ்.

ரேட்டிங் :- 4.25./5.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் மாஃபியா கும்பலை சேர்ந்த வித்யுத் ஜம்வால், மற்றும் ஷபீர் கல்லாரக்கல் இருவரும் தமிழ்நாட்டுக்குள் இருக்கும் மக்கள் அனைவரும் கையிலும் துப்பாக்கி ஏந்தும் கலாச்சாரத்தை
மிகப்பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என, மிகப்பெரிய அளவிலான ஆயுதங்களை  விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆறு கண்டெய்னர் லாரியில் துப்பாக்கிகளை தமிழகத்துக்கு கொண்டு  வருகிறார்கள்.

இந்த துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்கும் முயற்சியில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரியான பிஜு மேனன் தலைமையிலான குழு ஒன்று  தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
 
இது ஒரு பக்கம் இருக்க கதாநாயகன் சிவகார்த்திகேயன், காதலி கதாநாயகி ருக்மணி வசந்த தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயனை பகடைக்காயாக பயன்படுத்தி, பயங்கரவாத மாஃபியா கும்பலை சேர்ந்த வித்யுத் ஜம்வால், மற்றும் ஷபீர் கல்லாரக்கல் கும்பலின் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்கும் திட்டத்தை முறியடிக்க தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரியான பிஜு மேனன்  முடிவு செய்கிறார். 

இந்த நிலையில், கதாநாயகன் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 15 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரியான பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது.

தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரியான பிஜு மேனன் நினைத்தது போல் கதாநாயகன் சிவகார்த்திகேயன் வைத்து மாஃபியா கும்பலை சேர்ந்த வித்யுத் ஜம்வால், மற்றும் ஷபீர் கல்லாரக்கல் கும்பலின் தமிழகத்தில் நடக்கவிருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்கும் திட்டத்தை முறியடித்தார்களா? முறியடிக்க வில்லையா?

கதாநாயகன் சிவகார்த்திகேயன் எதனால் மனநிலை பாதிக்கப்பட்டார் காதலி ருக்மணி வசந்த எதற்காக பிரிந்து சென்றார் என்பதுதான் இந்த ’மதராஸி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மதராஸி திரைப்படத்தில் கதாநாயகனாக  சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

கதாநாயன சிவகார்த்திகேயன் மாஸ் அதிரடி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து குறிப்பாக கேஸ் தொழிற்சாலையில் நடைபெறும் சண்டைக்காட்சியும், கிளைமாக்ஸில் காட்சியில் நடைப்பெறும் வில்லன் உடனான
சண்டை காட்சிகளில் மட்டுமின்றி  தன்னுடைய அம்மா போன் செய்தது போல் நடிக்கும் செண்டிமெண்ட் காட்சிகளிலும்
மிரட்டியிருக்கிறார்.

இந்த மதராஸி திரைப்படத்தில் கதாநாயகியாக ருக்குமணி வசந்த் நடித்துள்ளார்.
 
கதாநாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், நடிப்பு மூலம்
திரைக்கதையோடு பயணிக்கிறார்.

கதாநாயகி ருக்மணி வசந்த  நடிப்பில் மட்டுமல்லாமல் அழகிலும் ரசிகர்களை கவருகிறார்

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வித்யுத் ஜம்வால், துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூப்பர் வில்லனாக மதராஸி திரைப்படத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வித்யுத் ஜம்வால், ஒரு காட்சியில் அவர் பேசும் “யார் கிட்ட வேண்டுமானாலும் துப்பாக்கி இருக்கலாம், ஆனால் நான் தான் வில்லன்” என்று பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டு  சண்டைக் காட்சிகளின்  அமர்க்களப்படுத்தியிருக்கிறார். 

மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக நடித்திருக்கும் பிஜு மேனன், மற்றும் பிஜு மேனன், மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும் வகையில் மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுதீப் எலமன், ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் முழுவதும் பிரமாண்டமாக ஹாலிவுட் தரத்தில் திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத், இசையில் பாடல்கள் படத்தின்  பின்னணி இசையால் திரைப்படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் தன்னை சிறந்த இயக்குநர் என நிரூபித்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கியை வைத்து கொண்டு மிகப்பெரிய சமூக பிரச்சனையை பேசியிருப்பதோடு, அதன் மூலம் திரைப்பட ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் கமர்ஷியல் விருந்து கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘மதராஸி’ திரைப்படம் சிவகார்த்திகேயன்  தமிழ் திரைப்பட உலகில் மாஸான கதாநாயகனாக உருவாக்கி விட்டது.

error: Content is protected !!