யாதும் அறியான் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- தினேஷ், பிரானா, தம்பி ராமையா, அப்புகுட்டி, விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், ஆனந்தராஜ், ராஜகுமாரி, ஷேக், திடியன், மாரிக்கனி, முருகன், சிவக்குமார், காசிலிங்கம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எம்.கோபி.

ஒளிப்பதிவாளர் :- எல்.டி.

படத்தொகுப்பாளர் :- நிரஞ்சன் ஆண்டனி.

இசையமைப்பாளர் :- தர்ம பிரகாஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்.

ரேட்டிங் :- 1.75/5.

கதாநாயகன் தினேஷ், மற்றும் கதாநாயகி பிரானாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள் கதாநாயகன் தினேஷ், தனது காதலி கதாநாயகி பிரானாவுடன் ஜாலியாகவும், படுக்கையில் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என் கதாநாயகன் தினேஷ் ஆசைப்படுகிறார்.

ஆனால், நெருக்கமாக கட்டி பிடிக்கவும் கண்ணத்தில் முத்தம் கொடுக்கவும் அனுமதி மறுக்கும் கதாநாயகி பிரானா, மற்ற அனைத்து விசயங்கள் திருமணத்திற்குப் பிறகு தான் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.

கதாநாயகன் தினேஷ் தனக்கு மிகவும் வற்ட்சியான காதல் பற்றி தனது நண்பரிடம் கூறி மிகவும் மனதளவில் கவலைப்படுகிறார்.

கதாநாயகன் தினேஷுக்கு அவரது நண்பர் ஒரு யோசனை கூறுகிறார்.

கதாநாயகன் தினேஷ் நண்பர் கூறிய யோசனைப்படி, கதாநாயகன் தினேஷின் காதலி கதாநாயகி பிரானா, மற்றும் நண்பர் மற்றும் காதலி என இரண்டு ஜோடியினர் காடுப்பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் ரூம் எடுத்து தங்கும் அந்த சொகுசு விடுதியில் மேலாளராக அப்புக்குட்டி இருக்கிறார்.

தனது நண்பரின் யோசனைப்படி கதாநாயகன் தினேஷ் தன் காதலியுடன் கட்டிலில் காம களியாட்டம் விளையாட முயற்சி செய்கிறார்.

கதாநாயகன் தினேஷ் கட்டிலில் விளையாட எடுக்கும் முயற்சிக்கு முதலில் முட்டுக்கட்டை போடும் கதாநாயகி பிரானா, பிறகு அவரது தொடர் முயற்சிக்கு அடிப்பணிந்து கதாநாயகன் தினேஷுடன் கட்டில் விளையாடி விடுகிறார்.

கட்டிலில் நடந்த அனைத்தையும் விளையாட்டையும் முடித்துவிட்டு, ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல் மனநிலையில் இருக்கும் கதாநாயகன் தினேஷுக்கு அடுத்த சில நிமிடங்களில் கதாநாயகி பிரானா பேரதிர்ச்சி கொடுக்கிறார்.

அந்தப் பேரதிர்ச்சி இருந்து மீள்வதற்காக உதவிக்கு தனது நண்பரை உதவிக்கு அழைக்கும் கதாநாயகன் தினேஷுக்கு அவரது நண்பரும், நண்பரின் காதலியும் அதைவிட பேரதிர்ச்சியை கொடுக்கிறார்கள்.

இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் தினேஷுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டாரா? மீளவில்லையா?
என்பதுதான் இந்த ‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘யாதும் அறியான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் தினேஷ் நடித்திருக்கிறார்.

அறிமுக நாயகன் தினேஷ், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருந்தாலும் நடிப்பு என்பது கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை.

கேமராவுக்கு முன் நடிக்க வருவதற்கு முன்பு நடிப்பு மற்றும் நடனம் சண்டை பயிற்சி அனைத்தையும் கற்றுக் கொண்டுதான் நடிக்க வர வேண்டும் பணம் இருப்பதற்காக மட்டும் நடிக்க வரக்கூடாது.

இந்த ‘யாதும் அறியான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக
பிரானா, நடித்திருக்கிறார்.

கதாநாயகி பிரானா, கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் சிறப்பாக செய்திருக்கிறார்.

கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, மற்றும் அவருடைய காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமல், விடுதி பணியாளராக நடித்திருக்கும் அப்புக்குட்டி என அனைவரும் அளவாக நடித்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எல்.டியின் ஒளிப்பதிவு மூலம் வனப்பகுதியில் இருக்கும் பழைய சொகுசு விடுதியை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பீதி ஏற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள், மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஒரு எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு, பல திருப்பங்கள் மூலம் வித்தியாசமான சைக்கோ திரில்லர் ஜானர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எம்.கோபி.

மொத்தத்தில், ‘யாதும் அறியான்’ திரைப்படம் மிக மிக சுமாராக இருக்கிறது.

error: Content is protected !!