அயலி இனையத் தொடர் விமர்சனம் ரேட்டிங்:- 4.5 /5.

நடிகர் நடிகைகள் :- அபிநயாஸ்ரீ, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, டி.எஸ்ஆர். சினி வாசன், லவ்லின், காயத்திரி, தாரா, மெல்லிசை, பிரகதீஸ்வரன், ஜென்சன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, ஸ்ம்ருதி வெங்கட், செந்தில் வேல், பகவதி பெருமாள், முத்துப்பாண்டி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- முத்துக்குமார்.

ஒளிப்பதிவு :- ராம்ஜி.

படத்தொகுப்பு :- கணேஷ் சிவா.

இசை :- ரேவா.

தயாரிப்பு நிறுவனம் :-  எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸ்.

தயாரிப்பாளர்:- குஷ்மாவதி.

ரேட்டிங் :- 4.5 / 5

ZEE5 ஓடிடி தளத்தில் கடந்த வருடம் விமல் கதாநாயகனாக நடித்த விலங்கு ஃபிங்கர்டிப், எஸ்2 மற்றும் பேப்பர் ராக்கெட் ஆகிய தொடர்கள் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த வரிசையில் 2023 ஆம் வருடத்திற்கான தனது முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ’அயலி’ இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான, எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த அயலி தொடர் 26 ஜனவரி 2023 வெளியாகிறது.

இப்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எத்தகைய வளர்ச்சி அடைந்தாலும் நிறைய கிராமங்களில் ஜாதி வெறி பிடித்த மதவெறி பிடித்தவர்கள் மற்றும் மூடநம்பிக்கை உள்ளவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

1990-களில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள வீரபண்ணை கிராமத்தில் அயலி என்ற குலத்தெய்வம் இருக்கிறது.

அந்த வீரபண்ணை கிராமத்தில் கால காலமாக அயலி சாமியை குலத்தெய்வத்திற்கு சில வழிபாடு முறைகள் உள்ளன.

அந்த வழிபாடு முறைகள் என்னவென்றால் அந்த ஊரில் இருக்கும் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும்.

ஒரு கிராமத்தில் வயதுக்கு வந்த உடனே பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது அவர்களை உடனடியாக திருமணத்திற்கு தயார்படுத்த வேண்டும் என்பதை காலா காலமாக இதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

வயதிற்கு வந்த உடனே திருமணத்தை நடத்த வேண்டும் இல்லையென்றால் தெய்வ குற்றம் ஆகிவிடும் என்று காலகாலமாக இந்த வீரபண்ணை கிராமத்தில் உள்ள மக்கள்  நம்பி வருகிறார்கள்.

இந்த முட்டாள் தனத்திற்கு அயலி என்ற பெண் தெய்வத்தை கிராமத்தில் உள்ளவர்கள் துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரையுமே தனது மூலம் கண்டிப்பாக விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதற்காகவும், வீரபண்ணை கிராம மக்களின் மூடநம்பிக்கைகளை சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என்று அந்த கிராமத்தில் உள்ள கதையின் நாயகி அபிநயாஸ்ரீ, போராடி வருகிறாள்.

தன் மக்களிடம் உள்ள மூட நம்பிக்கையை  உடைப்பதற்காக தான் வயதுக்கு வந்த விஷயத்தை தன் தாயை தவிர கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் மறைக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்திலேயே முதல் முதலாக கதையின் நாயகி அபிநயாஸ்ரீ, மட்டுமே 10ஆம் வகுப்பு படிப்பை முடிக்கிறாள்.

கதையின் நாயகி அபிநயாஸ்ரீயிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவளுடைய கனவு.

இதைத்தொடர்ந்து அவர் மேற் படிப்பை படிக்க கிராம மக்கள் தடை போடுகிறார்கள்.

அந்த கிராம விதிப்படி பருவமடைந்த பெண்கள்தான் படிக்கக் கூடாது என்பதால் கதையின் நாயகி அபிநயாஸ்ரீயின் தந்தை தன்னுடைய மகள் இன்னும் பெரிய மனுஷியாக வில்லை அப்புறம் என்ன உங்களுக்கு என கேள்வி கேட்கிறார்.

கடைசியில் கதையின் நாயகி அபிநயாஸ்ரீ, கிராம மக்களின் மூடநம்பிக்கையை எதிராக போராடி தான் நினைத்தபடி மருத்துவர் ஆகிறாரா? ஆகவில்லையா? என்பதுதான் இந்த அயலி வெப் தொடரின் மீதி கதை.

இந்த இணைய தொடரில் கதையின் நாயகியாக அபிநயாஸ்ரீ நடித்திருக்கிறார்.

தமிழ் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயஸ்ரீ, மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

தனது படிப்பு லட்சியத்தை நோக்கி தைரியமாக பயணிப்பதும், இடையில் வரும் பலவிதமான தடைகளை தன் குழந்தை தனத்தோடு தகர்த்தெறிந்து தொடந்து வெற்றி பெறுவதும், என்று அந்த தமிழஙசெல்வி கதாபாத்திரமாக இந்த அயலி தொடரை பார்ப்பவர்கள் மனதில் கண்டிப்பாக பதிந்து விடுகிறார்.

சட்டையில் இருக்கும் சிவப்பு கலரை பார்த்து ஊர் மக்கள் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள் “இங்கு” என்று சர்வசாதாரணமாக வசனத்தை பேசி விட்டு கடந்து போவதும், “இங்குனு சொன்னா ஊர்மக்கள் நம்புறானுங்க, முட்டாளுங்க” என்று அசால்டாக வசனம் பேசும் இடங்களில் அபிநயாஸ்ரீ கைதட்டல் பெறுகிறார்.

கதையின் நாயகி அபிநயாஸ்ரீ தாயாக நடித்திருக்கும் மலையாள நடிகை அனுமோல் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

காலம்காலமாக கனவுகளை மறைத்து தான் கட்டிய கணவனுக்கு நல்ல மனைவியாகவும் பெற்ற குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் இருந்தால் போதும் என்று வாழ்ந்து வரும் பெண்களை பிரதிபலிக்கும் வகையில் அருமையாக நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் தனது மகளின் செயலுக்கு பயப்படுபவர் பிறகு அவருக்கு ஆதரவாக இறங்கி பேசும் வசனங்கள் அனைத்தும் நெத்தியடியாக உள்ளது.

கதையின் நாயகி அபிநயாஸ்ரீ யின் தந்தையாக நடித்திருக்கும்
அருவி மதன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சேர்க்கை தனம் இல்லாத நடிப்பு அருமை.

பாசக்கார தந்தையாக நடித்தாலும், பழக்க வழக்கங்களை மாற்ற நினைக்க கூடாது என்று சொல்லும் இடத்தில் பெண்களை ஒடுக்கும் குணம் கொண்ட ஆண் திமிரை மிக நேர்த்தியான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கனகச்சிதமாக பொருந்தி விடுகிறார்.

சிங்கம்புலி, ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டி.எஸ்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் வரும் காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

காயத்ரி, லவ்லின், தாரா, பிரகதீஷ்வரன் என தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் கிராமத்து மண் மனம் மாறாமல் கிராமத்து மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளி மற்றும் பகவதி பெருமாள் வரும் காட்சிகள் கூட கவனம் பெறும் வகையில் இருப்பது தொடரின் கூடுதல் பலம்.

தன் கட்டிய மனைவிக்கு குழந்தை பேறு இல்லை என்று மனைவியின் தங்கையை மணமுடிக்க துடிக்கும் கதாபாத்திரத்தில் முத்துப்பாண்டி மிக அருமையாக நடித்துள்ளார்.

முத்துப்பாண்டி கதாபாத்திரம் தனது மாமியார் மாமனாரை பார்த்து பேசும் வசனங்கள் சரவெடிமாக இருக்கிறது.

இந்த முத்துப்பாண்டியின் கதாபாத்திரம் ஊர் பஞ்சாயத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் கோபம் வருவது போல் பேசுவது நடிப்பு தனி தன்மையாக காண்பித்துள்ளார்.

இசையமைப்பாளர் ரேவாவின் இசையில் பாடல்கள் ஒகே ரகம். ,

கதைக்கு ஏற்றவாறு பயணித்திருப்பதோடு, பின்னணி இசை பலம் சேர்த்திருக்கிறது.

அந்த வீரபண்ணை கிராமத்தையும், மக்களையும் மிகவும் இயல்பாக காண்பித்துள்ளது ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவில் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறார்.

பெண் கல்வியை மையப்படுத்திய ஒரு கதையை 8 பாகங்களாக மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பதோடு, அதை சுவாரஸ்யமாக நகர்த்தியும் சென்ற இவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அதிலும், வசனங்கள் அனைத்தும் பகுத்தறிவு சிந்தனையோடு இருக்கிறது.

கடவுளை வைத்து மக்களுக்கு மூடநம்பிக்கையும் பயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் முட்டாளாக்கி ஆதாயம் தேடுபவர்களை தோலுறித்திருக்கும் விதத்தில் அமைத்ததற்கு இயக்குநர் முத்துக்குமாருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘அயலி’ இணையத் தொடர் அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம்.