’தண்டகாரண்யம்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- தினேஷ், கலையரசன், ஷபீர், ரித்விகா,  பாலசரவணன், வின்சு சாம், அருள் தாஸ், முத்துக்குமார், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அதியன் அதிரை.

ஒளிப்பதிவாளர் :- பிரதீப் காளிராஜா.

படத்தொகுப்பாளர் :- செல்வா ஆர்.கே.

இசையமைப்பாளர் :- ஜஸ்டின் பிரபாகரன்.

தயாரிப்பு நிறுவனம் :-  நீலம் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- எஸ். சாய் தேவானந்த், எஸ். சாய் வெங்கடேஸ்வரன், பா.ரஞ்சித்.

ரேட்டிங் 3./5.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த  தினேஷ் மற்றும் மனைவி ரித்விகா தாய் தந்தை மற்றும்  கதாநாயகன் கலையரசன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் தினேஷ் தனது  தம்பி கதாநாயகன் கலையரசனுக்கு வனக்காவலர் வேலையை எப்படியாவது வாங்கி கொடுத்தே  தரவேண்டும் என தினேஷ் முயற்சிக்கிறார்.

கதாநாயகன் கலையரசன் வனத்துறையில் வனக்காவலர் உதவியாளராக தற்காலிகமாக பலவருடமாக பணியாற்றி வருகிறார்.

கதாநாயகன் கலையரசன் தன் எப்படியாவது அரசாங்க  ஊழியராகி விட வேண்டும் என  கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். 

கதாநாயகன் கலையரசன் செய்யும் வேலை நிரந்தரம் இல்லாமல் இருக்க கூடிய நிலையில் விரைவில் செய்யும் வேலை நிரந்தரமாகி விடும் என  சந்தோஷத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் வன காவல் அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பான கஞ்சா கடத்துவது மலைப்பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பது என இதை பார்த்த கதாநாயகன் கலையரசன் தன்னுடைய அண்ணன் சமூகப் போராளியான தினேஷிடம் கூறுகிறார்.

கதாநாயகன் கலையரசனின் அண்ணன் சமூகப் போராளியான தினேஷ் வன காவல் அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பான கஞ்சா கடத்துவதை படம் பிடித்து பத்திரிக்கையில் வெளியிட்டு ஊர் பெரிய மனிதன், வன அதிகாரிகள் மற்றும் அதற்கு உடந்தையானவர்களை  அனைத்தையும் சட்டத்துக்கு அடையாளம் காட்டுகிறார்.

இந்த நிலையில், உயர் வன காவல் அதிகாரிக்கும், தினேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் கதாநாயகன் கலையரசனின் தற்காலிக பணியும் பறிப்பு விடுகிறது.

இதனால் தனது தம்பி கதாநாயகன் கலையரசனை எப்படியாவது அரசு பணியில் சேர்த்து விட்டு  அழகு பார்க்க ஆசைப்படும் அண்ணன் தினேஷ், ஒருவரில் தகவலின் பேரில், நக்சலைட்டுகளை அழிப்பதற்காக  மத்திய அரசு உருவாக்கிய சிறப்பு காவல் பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்த்து விட முடிவு செய்கிறார்.

அதற்காக தன்னிடம் இருக்கும் விவசாய நிலத்தை விற்று பணம் கொடுத்து சிறப்பு காவல் பாதுகாப்பு படையில் பணிக்கு தினேஷ் அனுப்பி வைக்கிறார்.

அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் சிறப்பு காவல் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வரும் கதாநாயகன் கலையரசன், பலவிதமான கஷ்ட்டங்களை அனுபவித்தாலும், அரசு வேலையோடு தான் தனது சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்ற மனநிலையில் இருக்க, அந்த இடத்திற்கு வருபவர்கள் உயிரோடு எங்கும் செல்ல முடியாது, என்ற உண்மையை தெரிந்துக் கொள்கிறார்.

அங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறப்பு காவல் பாதுகாப்பு படைப்பிரிவில் அப்படி  என்னதான் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது? கதாநாயகன் கலையரசன் சிறப்பு காவல் பாதுகாப்பு படைப்பிரிவில் இருந்து கதாநாயகன் கலையரசன் தப்பித்தாரா? தப்பில்லையா ? என்பதுதான் இந்த ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தில் கதாநாயகர்களாக தினேஷ் கலையரசன் இருவரும் நடித்திருக்கிறார்.

கதாநாயகர்களாக நடித்திருக்கும் தினேஷ் மற்றும் கலையரசன் இருவரும் பழங்குடி இன மக்களை பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரங்களாக மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 

கதாநாயகன் கலையரசன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு  உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்து தன்னுடைய உயிர் மற்றும் நண்பர்கள் உயிர்  போகப்போகிறது என்பதை அறிந்தவுடன் பதற்றம் அடையும் போதும், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போதும், நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் பதற்றமடைய செய்துவிடுகிறார். 

பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞராக அமைதியான முறையில் அநியாயங்களை எதிர்த்து தன்னுடைய மக்களுக்கு துரோகம் செய்யும் அரசு அதிகாரிகளை எதிர்த்து குரல் கொடுக்கும் கதாநாயகன் தினேஷ், பொங்கி எழுந்து தனது விஸ்வரூபத்தை வெளிக்காட்டும் பல காட்சிகளில் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

நன்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல், பாலசரவணன், ரித்விகா, வின்சு சாம், அருள்தாஸ், முத்துகுமார், யுவன் மயில்சாமி என மற்ற திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களில்   நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கதாபாத்திர வடிவமைப்புக்கு ஏற்ற உடல் மொழி மற்றும் நடிப்பின் மூலம், அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். .

ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா, ஒளிப்பதிவு மூலம் அடர்ந்த வனப்பகுதிகளையும், அப்பகுதிகளை ஒட்டி வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் மிகவும் அழகாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

உண்மை சம்பவத்தின் அடிப்படை கொண்ட கதைக்கரு என்றாலும், நம் நாட்டில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை மிக துணிச்சலோடு சொல்வதோடு, அனைத்து தரப்பினரையும் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு வலிமையான படைப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.

இப்படி ஒரு கதையை இயக்கி அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல் உரித்த இயக்குனர் அதியன் ஆதிரை அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘தண்டகாரண்யம்’  அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!