’சரண்டர்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தர்ஷன், பாடினி குமார், மன்சூர் அலிகான், லால், சுஜித் ஷங்கர், முனிஷ் காந்த், அருள் டி சங்கர், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கௌசிக், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கௌதமன் கணபதி.
ஒளிப்பதிவாளர் :- மெய்யேந்திரன்.
படத்தொகுப்பாளர் :- ரேணு கோபால்.
இசையமைப்பாளர் :- விகாஸ் படிஸா.
தயாரிப்பு நிறுவனம் :- அப்பீட் பிச்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- விஆர்வி குமார்.
ரேட்டிங் :- 4.25/5.
சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் கதாநாயகன் தர்ஷன். பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
அதே காவல் நிலையத்தில் தலைமை கவலராக பணிபுரிந்து வரும் லால் இன்னும் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கும் கை துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
நடிகர் மன்சூர் அலிகான் தனது துப்பாக்கியை காவல் நிலையத்தில் தலைமைக் காவலரான லாலிடம் ஒப்படைக்கிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் அந்த துப்பாக்கி மட்டும் காணாமல் போய்விடுகிறது.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் ஒப்படைத்த காணாமல் போன அந்த துப்பாக்கியை பயிற்சி உதவி ஆய்வாளரான கதாநாயகன் தர்ஷன், தலைமையிலான குழு ஒன்று அந்தத் துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்காக ஈடுபடுகிறது.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தாதாவான சுஜித் சங்கர் தேர்தல் நிதிக்காக ரூபாய் 10 கோடியை நிதியை கட்சிக்கு கொடுக்கிறார்.
ஆனால் அந்த பணம் காணாமல் போய்விடுகிறது.
தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் காணாமல் போன துப்பாக்கியை நான்கு நாட்களில் கண்டுபிடிக்க வேண்டும் என ஆய்வாளர் கட்டளை இடுகிறார்.
காணாமல் போன அந்த துப்பாக்கிய கண்டுபிடிக்க வேண்டிய சூழலில் இருக்கும் கதாநாயகன் தர்ஷனுக்கு தாதாவான சுஜித் சங்கர் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது.
தாதாவான சுஜித் சங்கர் மூலம் வந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும், காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போன துப்பாக்கியையும் கண்டுபிடித்தாக வேண்டும், என்ற இக்கட்டான சூழ்நிலைகளை அவர் எப்படி சமாளித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்.
அவனிடத்தில் இருந்து காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?,
தாதாவான சுஜித் சங்கர் கட்சி நிதிக்காக அனுப்பிய காணாமல் போன 10 கோடி ரூபாய் கிடைத்ததா? கிடைக்கவில்லையா?, என்பதுதான் இந்த “சரண்டர்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சரண்டர் திரைப்படத்தில் கதாநாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் காவல்துறை சீறுடை கச்சிதமாக பொருந்துவதோடு, கம்பீரமாகவும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போலவே காட்சியளிக்கிறார்.
கதாநாயகன் தர்ஷன் நடிப்பிலும் மிகப்பெரிய அளவில் நல்ல முன்னேற்றம், ஆக்ஷன் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அருமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மிகவும் நல்லவனாக வாழ்ந்தால் இந்த பிரபஞ்சத்தில் நல்லவனாக வாழ முடியாது, என்பதை பிரதிபலிக்கும் வகையில் அந்த கதாபாத்திரத்தில் தலைமை காவலராக நடித்திருக்கும் லால், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கும், திரைப்படத்திற்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஜித் சங்கர், என்னுடைய எதிரிகளை வேட்டையாடுவதும், காவல்துறையில் உள்ள காவலர்களை மிரட்டுவது, போட்டுத்தள்ளுவது என்று அவரது நடவடிக்கை சற்று அதிகமாக இருந்தாலும், அளவான நடிப்பு கொடுத்து கனகு கதாபாத்திரத்தில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஜித் சங்கர், தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளசிக் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
முனிஷ்காந்த் வரும் ஒரு சில காட்சிகள் சிரிக்க வைக்கிறார்.
பாடினி குமார், மற்றும் காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள் டி.சங்கர், நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான், சுந்தரேஸ்வரன் என அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு மூலம் இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் மிகச்சிறப்பாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ரேணு கோபால் தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் விகாஷ் படிஷாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் திரைப்படத்தின் பரபரப்பையும், விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்திருக்கிறார்.
மிகவும் சர்வ சாதாரணமான ஒரு கதையை வைத்துக் கொண்டு, விறுவிறுப்பான பரபரப்பான அருமையான திரைக்கதையின் மூலம் சிறப்பான காட்சிகள் மூலம், முழுமையான ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதமன் கணபதி.
இரண்டரை மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு திரைப்படத்துடன் திரையரங்கலி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் பதற்றத்துடன் பயணிக்க பயணிக்க வைத்த இயக்குநர் கவுதமன் கணபதி, எங்களது MOVIEWINGZ.COM இணையதளம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுக்கள்.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் இதில் நடித்த நடிகர்கள் நடித்தால் அதையும் கண்டு ரசிக்க காத்திருப்போம்.
மொத்தத்தில், ‘சரண்டர்’ திரைப்பட ரசிகர்கள் அனைவரும் இந்த சரண்டர் திரைப்படத்திற்கு சரண்டர் ஆகி விடுவார்கள்.











