தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு ‘ஹரா’ திரைப்படக்குழுவின் சார்பில் நன்றி!

தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு ‘ஹரா’ திரைப்படக்குழுவின் சார்பில் நன்றி!

சென்னை 29 ஜூலை 2026 ‘சில்வர் ஜூப்ளி ஸ்டார்’ மோகன் அவர்கள் நடித்த, இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில்  கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹரா’.

இந்த திரைப்படத்தில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் ‘ஹரா’ திரைப்படக்குழுவினர் வலியுறுத்தியிருந்தனர்.

ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள் இதுபோன்ற நடைமுறைகளை அறிமுகப்படுத்திய போது, திரைப்படக்குழுவின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.

இந்த முடிவை விரைவாக நடைமுறைப் படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களைப் ‘ஹரா’ திரைப்படக்குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், பள்ளிப் பருவத்திலிருந்தே இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

இதற்காக தமிழக அரசுக்கும், செய்தி மற்றும் விளம்பரத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் எங்களது    ‘ஹரா’ திரைப்படக்குழுவினர் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

error: Content is protected !!