சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்்.
சென்னை 14 மே 2021
சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
பிரபலமான பல சேனல்களில் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சமீபகாலமாக தமிழ் திரைப்பட உலகில் பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோக சம்பவங்கள் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியுள்ள சூழலில், தொடர்ச்சியாக திரை இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதே போல் நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா ஜோக்கர் துளசி, மாறன் உள்ளிட்டோரின் மரணம் மேலும் திரைப்பட உலகில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே சின்னத்திரை நடிகை சித்ரா தொடங்கி முக்கிய நகைச்சுவை கலைஞர் வடிவேல் பாலாஜி, பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகர் ஜோக்கர் துளசி, பாரதி கண்ணம்மா நடிகரான வெங்கட் உள்ளிட்ட பலரும் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின் கதாநாயகியாக நடித்து வரும் தேன்மொழி பி ஏ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.
இந்த சீரியலில் ஜாக்லினின் தந்தையாகவும் ஊராட்சி மன்ற தலைவராகவும் சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் குட்டி ரமேஷ்.
இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
இவரது இறப்பிற்கு விஜய் டிவி ஆறுதல் கூறியுள்ளது.
சன்.டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் வெகு காலமாக சீரியல்களில் நடித்து வந்த குட்டி ரமேஷ் மரணம் அடைந்துள்ள செய்தியை விஜய் டிவி தமது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளது.
இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்











