‘TN 2026′ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, சாண்டி, சத்யா, மகேஷ் மேத்யூ, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- உமாபதி ராமையா.
ஒளிப்பதிவாளர் :- P.G. முத்தையா.
படத்தொகுப்பாளர் :- அரள் R. தங்கம்.
இசையமைப்பாளர் :- தர்புகா சிவா.
தயாரிப்பு நிறுவனம் :- கண்ணன் ரவி குரூப்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கண்ணன் ரவி, தீபக் ரவி.
மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )
ரேட்டிங் :- 4.25./5.
வடக்கன் என்று கூறும் வட மாநிலத்தை சேர்ந்த கதாநாயகன் நட்டி நட்ராஜ், சென்னை மாகாணத்திற்கு பிழைப்பு தேடி வந்து எதிர்பாரதவிதமாக தமிழ் திரைப்பட உலகில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து முதல் திரைப்படத்தில் கதாநாயகன் அந்தஸ்தை பெற்று விடுகிறார்.
கதாநாயகன் நட்டி நட்ராஜ், நடித்த முதல் திரைப்படம் தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெறுவதோடு, கதாநாயகன் நட்டி நட்ராஜ் அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தையும் தமிழக மக்கள் மனதில் பிடித்து விடுகிறார்.
பொள்ளாச்சியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் மிகப்பெரிய ஜமீன்தார் தம்பி ராமையா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான தம்பி ராமையா கதாநாயகன் நட்டி நட்ராஜ் நடித்த திரைப்படத்தை பார்த்த போது அடுத்தது எம்.ஜி.ஆர் இடத்தை பிடிப்பார் என்பதை மனததளவில் கணிப்பதோடு, மட்டுமல்லாமல் கதாநாயகன் நட்டி நடராஜுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து திரைப்பட உலகில் கதாநாயகன் நட்டி நடராஜ் மிகப்பெரிய அளவில் உச்ச நட்சத்திரம் ஆக்கும் பயணத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்.
பாக்ஸ் ஆபிஸ் உச்சநட்சத்திரமாக 200 கோடி சம்பளம் வாங்கும் திரைப்பட உலகில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ள கதாநாயகன் நட்டி நட்ராஜ் அரசியல் பேச வைப்பதோடு, மட்டுமல்லாமல் புதிய அரசியல் கட்சியையும் தொடங்க வைக்கும் தம்பி ராமையா, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு உச்ச நட்சத்திரம் கதாநாயகன் நட்டி நடராஜ் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர், என்ற நம்பிக்கையையும் கதாநாயகன் நட்டி நட்ராஜ் மனதில் ஆழமாக பதிய வைத்து அரசியலில் பயணிக்க வைக்கிறார் தம்பி ராமையா.
கதாநாயகன் நட்டி நட்ராஜ் எடுக்கும் திடீர் முடிவு அது என்ன ? கதாநாயகன் நட்டி நட்ராஜ் அரசியலுக்கு வருவதால் என்னென்ன விளைவுகளை சந்தித்தார்.
இந்த நிலையில், கதாநாயகன் நட்டி நட்ராஜ் எடுக்கும் திடீர் முடிவு தமிழக அரசியல் மட்டுமின்றி திரைப்பட உலகின் பெரும் மாற்றத்தையும், மிகப்பெரிய அளவில் தமிழக மக்களிடையே தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
என்பதுதான் இந்த ‘TN 2026’ ‘தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘TN 2026’ ‘தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நட்டி நட்ராஜ் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் குல்கந்த் குமார் என்ற தங்க நட்சத்திரமாக திரையில் வாழ்ந்திருக்கிறார்.
பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்து, தமிழை தவறாக உச்சரிப்பதால் மக்கள் மனதில் திரைப்பட உலகில் நடிகராக உச்சத்தை தொடும் அவரது நடிப்பு மற்றும் உடல்மொழி அனைத்தும் ஏற்று நடித்திருக்கும் தங்க நட்சத்திரம் கதாபாத்திரத்தில் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
பொள்ளாச்சியில் மிகப்பெரிய ஜமீன்தாராக இருந்தாலும், கதாநாயகன் நட்டி நட்ராஜ்க்கு சேவகன் ஆகவும் மேலாளராகவும், அரசியல் வழிகாட்டியாகவும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் தம்பி ராமையாவின் தோற்றம் மற்றும் கெட்டப், உடல் மொழி தமிழகத் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரம் ஆக இருக்கும் ஒருவரது புதியதாக ஆரம்பித்திருக்கும் கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பவரை நினைவுப்படுத்துவதோடு, மட்டுமல்லாமல் அவரது நடிப்பு மற்றும் அவர் தீட்டும் திட்டங்கள், தற்போதைய சூழலில் தமிழக அரசியலின் சூறாவளியாக சுழன்று வரும் உச்ச நடிகரின் செயல் வீரரை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்துகிறது.
இந்த ‘TN 2026’ ‘தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக ஷ்ரிதா ராவ், நடித்துள்ளார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா ராவ், அழகாக வந்து கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் தங்க நட்சத்திரத்துடன் பயணிக்கும் அரசியல்வாதிகளாக வலம் வந்தாலும், அவர்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு மூலம் மிக எளிமையாகவும், இயல்பாகவும் காட்சிகளை திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக. அமைந்திருக்கிறது
இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
வட மாநிலத்தைச் சேர்ந்த உச்ச நடிகர் ஒருவரின் திரையுலக பயணத்தின் மாபெரும் வெற்றி, காதல், திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றுடன் அவர் ஆரம்பிக்காத அரசியல் கட்சி பயணத்தின் முடிவும் சேர்த்து மிகவும் சிறப்பான திரைக்கதையாக்கியிருப்பதோடு, மட்டுமல்லாமல் அதை தற்போதைய உச்ச நட்சத்திரத்தின் தற்போதைய அரசியல் பயணம் மற்றும் அவருடைய உருவ தோற்றத்தின் பாதிப்போடு மிகவும் சுவாரஸ்யமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.
தமிழ் திரைப்பட உலகில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி இவர்களை தொடர்ந்து தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் அரசியல் களத்தில் பயணித்தாலும், சினிமா மற்றும் அரசியல் அவர் இடத்தை பிடித்தது போல் அரசியலில் யாரும் பிடிக்கவில்லை என்ற உண்மையை நகைச்சுவையாகவும், நையாண்டியுடனும் உரக்க சொல்லியிருக்கும் இயக்குநர் உமாபதி ராமையா.
முக்கிய குறிப்பு :- அன்பு ரசிகப் பெருமக்களே இந்த TN 2026 தங்க நட்சத்திரம் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்கும் போது குலுங்கி குலுங்கி சிரித்து வயிறு வலித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இந்த திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளரே இயக்குனரே பொறுப்பு அல்ல.
மொத்தத்தில், ’TN 2026’ தங்க நட்சத்திரம் திரைப்படம் குடும்பத்தில் உள்ள குறைகளை மறந்து பார்வையாளர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலந்த அரசியல் கிண்டல்கள் நையாண்டி செய்து ரசிகர்களை மகிழ்விக்கும் திரைப்படம்.











