‘திரௌபதி 2’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி. மகேந்திரன், பரணி, சரவண சுப்பையா, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், ஜாக்குவார் நாதன், திவி வைத்தியநாதன், தினேஷ் ஷர்மா, தேவயானி சர்மா, அருணோதயன், தர்மராஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மோகன் ஜி.
ஒளிப்பதிவாளர் :- பிலிப் கே.சுந்தர்.
படத்தொகுப்பாளர் :- தேவராஜ்.
இசையமைப்பாளர் :- ஜிப்ரான்.
தயாரிப்பு நிறுவனம் :- நேதாஜி புரொடக்ஷன்ஸ்,
தயாரிப்பாளர் :- சோலா சக்கரவர்த்தி.
ரேட்டிங் :- 3.5./5.
நாடகக் காதலை மையமாக வைத்து நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிகை ஷீலா, கருணாஸ், ஆகியோர் நடிப்பில் ‘திரெளபதி’ திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை 23 ஜனவரி 2026 அன்று வெளியாகி உள்ளது.
கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி தன் மகளுடன் சொர்ண காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.
அந்த கிராமத்தில் உள்ள வக்பு வாரியம் மூலம் கோவில் நிலங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இதற்காக ஊர் மக்களை அனைவரையும் ஒன்று இனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி பேட்டி அளிக்கிறார்.
அந்த நிலையில் கிராமத்திலிருந்து வெளிநாட்டில் சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் அந்த கிராமத்திற்கு கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியை சந்திக்க வரும் கதாநாயகி ரக்ஷனா இந்துசூடன், மற்றும் தங்கையுடன் அந்த கிராமத்தில் 700 வருடங்களுக்கு முன் பாழடைந்து போன சொர்ணா காமாட்சி அம்மன் திருக்கோவிலை பராமரிக்க முன் வருகிறார்.
கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி, மற்றும் அவருடைய சித்தப்பா ஜெயவேல் சாமியார் தர்மராஜ், கதாநாயகி ரக்ஷனா இந்துசூடன், மற்றும் அவருடைய தங்கை அந்த பாழடைந்து போன சொர்ண காமாட்சி அம்மன் திருக்கோவிலை சுற்றிப் பார்க்க சென்ற நிலையில் கதாநாயகி ரக்ஷனா இந்துசூடன், உடம்பில் அமானுஷ்ய சக்தி ஒன்று ஊடுருவி வினோதமாக நடந்து கொள்கிறார்.
இறுதியில் கதாநாயகி ரக்ஷனா இந்துசூடன், உடம்பில் ஊடுருவிய அமானுஷ்ய சக்தி என்ன யார்? எதற்காக அந்த அமானுஷ்ய சக்தி கதாநாயகி ரக்ஷனா இந்துசூடன், உடம்பில் புகுந்தது? என்பதுதான் இந்த திரெளபதி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த திரெளபதி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, வல் சண்டை குதிரை ஏற்றம் என நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்.
வீரம், ஆக்ரோஷமான காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி தளபதி கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னுடைய கம்பீரமான தோற்றத்துடன் உடலை மெருகேற்றி இருக்கிறார்.
மனைவியை பிரிந்து பரிதவிக்கும் காட்சியிலும் மன்னரின் உத்தரவை செயல்படுத்த நினைக்கும் காட்சியிலும் நடிப்பில் கவர்கிறார்.
இந்த திரெளபதி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக கதாநாயகி ரக்ஷனா இந்துசூடன், நடித்துள்ளார்.
திரௌபதி என்ற கதாபாத்திரத்தை தாங்கி நிற்கும் கதாப்பாத்திரம் திரைப்படம் முழுவதும் இவரது உடல் மொழியும் உதட்டு மொழியும் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகி ரக்ஷனா இந்துசூடன், தன் நடிப்பில் மிரளச் செய்திருக்கிறார்
80 வயது மகாராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நடராஜ் நடிப்பில் மகாராஜா கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
பெரும்பாலும் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் பயணித்த பரணிக்கு இந்த திரைப்படத்தில் அருமையான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த திரெளபதி 2 திரைப்படத்தில் நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி. மகேந்திரன், சரவண சுப்பையா, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், ஜாக்குவார் நாதன், திவி வைத்தியநாதன், தினேஷ் ஷர்மா, தேவயானி சர்மா, அருணோதயன், தர்மராஜ் அனைவரும் கொடுத்து வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிலிப் கே சுந்தரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் கை கொடுத்து இருக்கிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
13 ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் நடந்த கதையை கையில் எடுத்த இயக்குனர் மோகன் ஜி அவர்கள் கதாபாத்திரங்களையும் கதாபாத்திரங்கள் அணிந்திருக்கும் உடைகளையும் மற்றும் ஆபரணங்கள் நடிகர் மற்றும் நடிகைகள் ஒப்பனைகளையும் கவனம் செலுத்தி இருந்தால் இந்தத் திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் பொக்கிஷமாக அமைந்திருக்கும்.
இந்து, மற்றும் இஸ்லாம் மதத்திற்கு இடையே நடந்த பிரச்சனையை கதை மற்றும் திரைக்கதையாக அமைத்து 13 ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவிற்கும் சுல்தான் அரசர்களுக்கும் இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரெளபதி 2 திரைப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
மொத்தத்தில், இந்த திரெளபதி 2 திரைப்படம் ஒரு வரலாற்று இதிகாசமாக எடுத்திருக்கிறார்.











