‘மெய்யழகன்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ் கிரண், ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி கொண்டே, தேவதர்சினி, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண் சக்தி, ரேச்சல் ரெபேக்கா, ஆண்டனி, ராஜசேகர் பாண்டியன், இந்துமதி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சி.பிரேம்குமார்.

ஒளிப்பதிவாளர் :- மகேந்திரன் ஜெயராஜூ.

படத்தொகுப்பாளர் :- ஆர். கோவிந்தராஜ்.

இசையமைப்பாளர் :- கோவிந்த் வசந்தா.

தயாரிப்பு நிறுவனம் :- 2டி என்டர்டைன்மென்ட்.

தயாரிப்பாளர்கள் :- நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா.

ரேட்டிங் :- 3.75/5.

 

பிறந்து, வாழ்ந்து, பழகி உறவாடிய தனது சொந்த மண்ணிலிருந்து சொத்து பிரச்சினை காரணமாக வீட்டை காலி செய்து குடும்பத்துடன்  தஞ்சாவூரை விட்டு அரவிந்த் சாமியின் குடும்பம் சென்னையில் குடியேறுகின்றனர்.

20 ஆண்டு காலங்கள் தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூர் விட்டு மற்றும் தன் சொந்தங்களை விட்டு எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

தனது குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு தஞ்சாவூருக்கு செல்கிறார்.

மனது நிறைய தன்தங்கை மீது பாசம் இருந்தாலும், சொந்தங்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்லும் அரவிந்த்சாமிக்கு, உறவினரான கதாநாயகன் கார்த்தி திருமண வீட்டில் அறிமுகமாகிறார்.

கதாநாயகன் கார்த்தி திருமணத்திற்கு வரும் அரவிந்தசாமியிடம் அதிக அளவில் அன்பு காட்டுகிறார்.

கதாநாயகன் கார்த்தி என்ன உறவு எந்த விதத்தில் உறவு, அவருடைய பெயர் என்ன என்பது கூட தெரியாமல், தெரிந்தும் தெரியாதபோல் அவருடன் பழகும் அரவிந்த்சாமி, கதாநாயகன் கார்த்தியின் மூலமாக தன்னைப் பற்றியும், தன்னுடைய உறவுகளின் பற்றியும் அந்த ஊரைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார்.

கதாநாயகன் கார்த்தி என்ன உறவு என்று அரவிந்தசாமிக்கு தெரிந்ததா? தெரியவில்லையா? என்பதுதான் இந்த ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மெய்யழகன் திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, நடிப்பு, பேச்சு, உடல் மொழி, வெகுளித்தனம், பாசம் அன்பு என அனைத்து உனர்வுகளையும் மிக அழகாக வெளிக்காட்டி மெய்யழயகன் என்ற கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் உயிர் கொடுத்திருக்கிறார்.

சிட்டியில் வசிக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் இருந்தாலும் சரி வில்லேஜ் இருக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நமது தோற்றத்தையும் நடை உடை பாவனை அனைத்தையும் தனக்கு ஏற்றது போல் தன்னை அந்தக் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருத்திக் கொள்வார்.

கதாநாயகன் கார்த்திக்கு இணையான மற்றொரு கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி மிக அருமையாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

அரவிந்தசாமி அருள்மொழி என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

கதாநாயகன் கார்த்தியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என பிரபல நடிகர் நடிகைகள் பலர் நடித்திருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு கதைக்களத்தின் அழகை மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக அழகாக ஒளிப்பதிவின் மூலம் காட்சிப்படுத்திருப்பது மிகச் சிறப்பு.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிகவும் சிறப்பான முறையில் பயணித்திருக்கிறார்.

உறவுகளையும், உணர்வுகளையும் மக்களிடம் கடத்தும் கதையை மிகச் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்த விதம் மிக மென்மையாக இருப்பதோடு, திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை இளைபாற வைப்பது போல் இயக்கியிருக்கிறார்
இயக்குநர் சி.பிரேம்குமார்.

ஆனால், குறிப்பாக மது அருந்தும் காட்சியில் தமிழர்களின் வரலாறு, வீரம், ராஜராஜ சோழன் ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஈழத்தமிழர்கள் படுகொலை என்று சமூக கருத்துகளை பேசுவது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவை கொஞ்சம் கூட திரைப்படத்திற்கு ஒட்டாமல் இருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘மெய்யழகன்’ திரைப்படம் மனிதன் பேசும் உறவுகளுக்கு மனதுக்கு நெருங்கியவன்.