உழைப்பாளர் தினம் திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சந்தோஷ் நம்பிராஜன், குஷி, அன்புராணி, கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குனர் சம்பத்குமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சந்தோஷ் நம்பிராஜன்.

ஒளிப்பதிவாளர் :- சதீஸ் துரைகண்ணு.

படத்தொகுப்பாளர் :- கோட்டிஸ்வரன்.

இசையமைப்பாளர் :- மசூத் ஷம்ஷா.

தயாரிப்பு நிறுவனம் :- சிங்காவுட் புரொடக்‌ஷன், நம்பிராஜன் இண்டர்நேஷனல் சினிமாஸ்
ராக் எண்டர்டெயின்மெண்ட்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- ராஜேந்திரன் கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், பிரேம்சந்த் நம்பிராஜன், ராஜேந்திரன் நீதிபாண்டி, கஜா, சரஸ்.

ரேட்டிங் :- 1.5./5

கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் திருமணம் ஆகி விடுகிறது.

சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு வந்த கதாநாயகனுக்கு மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இளம் மனைவியுடன் முதல் இரவு அறையில் முதலிரவு நடக்காதது படங்கள் ஏற்படுகிறது.

14 நாட்கள் உள்ள நிலையில் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் இளம் திருமண ஜோடிகள் முதல் இரவு ஏக்கத்தில் தவிக்க, இவர்களுக்கு ஏதாவது இடையூறு வந்துக் கொண்டே இருக்கிறது.

அதையெல்லாம் சமாளித்து இருவரும் சந்தோஷமாக வாழும் நேரத்தில் அதற்குள் கதாநாயகனுக்கு வெளிநாடு வேலைக்காக செல்ல தன் இளம் மனைவியை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது.

குடும்ப கஷ்டத்திற்காகவும் எப்படியாவது அந்த ஊரில் ஒரு கடை வைத்து சொந்த ஊரில் செட்டில் ஆக வேண்டும் என கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் தன் கனவு நிறைவேற வேண்டும் என வெளிநாடு சென்று (சிங்கப்பூர்)

கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் கடை வைக்கும் கனவு நிறைவுறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் இந்த உழைப்பாளர் தினம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த உழைப்பாளர் தினம் திரைப்படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன் இன்னும் கொஞ்சம் தெளிவாக நடிப்பு கற்றுக் கொண்டு கதாநாயகனாக நடிக்க வேண்டும்.

இந்த உழைப்பாளர் தினம் திரைப்படத்தில் குஷி கதாநாயகன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் குஷி ஒரு சில காட்சிகள் அருமையான நடத்தி இருக்கிறார்.

அன்புராணி, கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குனர் சம்பத்குமார் யதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டுகள்.

ஒளிப்பதிவாளர் சதீஸ் துரைகண்ணு ஒலிப்பதிவு ஒரு சில காட்சிகள் அருமையாக இருக்கிறது மற்ற கட்சிகள் சுமாராக இருக்கிறது.

இசையமைப்பாளர் மசூத் ஷம்ஷா இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமாராக உள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை பற்றிய இப்படி ஒரு நல்ல கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையில் மற்றும் காட்சி அமைப்புகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் மிகவும் அருமையான திரைப்படமாக அமைந்திருக்கும் இந்த உழைப்பாளர் தினம்

ஒளிப்பதிவாளர் இயக்குனர் செழியனின் உதவியாளராக பணியாற்றியவர் சினிமா தெரிந்தும் சினிமா தெரியாதது போல் திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன்.
.
மொத்தத்தில் இந்த உழைப்பாளர் தினம் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் அளவில் இல்லை.