‘ரேசர்’ திரைப்பட விமர்சனம் ரேட்டிங்:- 2.75/5

.நடிகர் & நடிகைகள் :- அகில் சந்தோஷ், லாவண்யா, ஆறு பாலா, சுப்ரமணியன் பார்வதி, சரத், நிர்மல், சதீஷ், சாம், அரவிந்த், அனீஸ் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சாட்ஸ் ரெக்ஸ்.

ஒளிப்பதிவு :- பிரபாகர்.

படத்தொகுப்பு :-  அஜித் என்.எம்.

இசை :- பரத்.

தயாரிப்பு நிறுவனம் :-  ஹஸ்ட்லர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் – ரெட்டல் மீடியா ஒர்க்ஸ்.

தயாரிப்பாளர் :- கார்த்திக் ஜெயஸ், சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி.

ரேட்டிங் :- 2.75 / 5

 

மிகப்பெரிய விளையாட்டான பைக் ரேஸ் கரணம் தப்பினால் மரணம் என பயங்கரமான ஒரு விளையாட்டு இந்த பைக் ரேஸ் மையமாக வைத்து ஒரு திரைப்படம் தயாரிப்பது என்றால் அதன் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும்.

இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ், தனக்கு கிடைத்த சின்ன பட்ஜெட்டையும், கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

கதாநாயகன் அகில் சந்தோஷ்க்கு சிறு வயதிலிருந்து பைக் மற்றும் பைக் ரேஸ் மீது அதிக அளவில் ஆர்வம் ஏற்படுகிறது.

பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகன் அகில் சந்தோஷ்க்கு தனது தாய் தந்தையிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காமல் போகிறது.

ஆனால் அவன் தாய் தந்தை ஒரே பிள்ளை என்பதால் ரேசில் கலந்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் விபத்து, ,  உயிர் போகும் நிலை உள்ளதால் தாய் தந்தையருக்கு அந்தப் பாதையில் பயணிக்க வைக்க விருப்பம் இல்லை.

அது ஒருபுறம் இருக்க தனது லட்சியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ன லட்சியத்துடன் இருக்கும் கதாநாயகன் அகில் சந்தோஷ் பைக் ரேசர் ஆனாரா? ஆகவில்லையா? என்பதுதான் இந்த ’ரேசர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத ரேசர் திரைப்படத்தில் கதாநாயகனாக அகில் சந்தோஷ் நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அகில் சந்தோஷ் அறிமுகமான திரைப்படம் போல் இல்லாமல் மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார்.

இந்த ரேசர் திரைப்படத்தில் கதாநாயகியாக லாவண்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, குறைவான காட்சிகள் வந்தாலும் கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.

பைக் மெக்கானிக்காக நடித்திருக்கும் ஆறு பாலா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் மூர்த்தியின் கதாப்பாத்திரம் கதாநாயகனுக்கு அளவிற்கு கவனம் பெறுகிறது.

தனக்கு ஒரு பிள்ளையாக இருந்தாலும், அவருடைய ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், பிறகு தன் மகனின் ஆசையை புரிந்துக்கொண்டு நிறைவேற்றுவது என்று நடிப்பில் அசத்தி உள்ளார்.

கதாநாயகனின் நண்பர்களாக வரும் சரத், நிர்மல் மற்றும் சதீஷ் ஆகியோரின் கதாபாத்திரமும், நடிப்பும் அருமையாக உள்ளது.

வில்லனாக வரும் அரவிந்த், கதாநாயகனின் பயிற்சியாளராக வரும் அனீஷ் மற்றும் தாயாக வரும் பார்வதி என அனைவரும் தங்கள் வேலையை மிக அற்புதமாக செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரபாகர் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பிரபாகர் தனக்கு கிடைத்த குறைவான வசதிகளை வைத்துக்கொண்டு ரேஸ் காட்சிகளை மிகவும் அற்புதமாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் பரத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

பல காட்சிகளை வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் சாட்ஸ் ரெக்ஸ்.

மொத்தத்தில் ரேசர் திரைப்படம் ‘ரேசர் க்கு வெற்றி நிச்சயம் கிடைக்க வேண்டும்.