வீர தீர சூரன் பாகம் 02 திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் –  சீயான் விக்ரம் S.J.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடூ, துஷாரா விஜயன், மாருதி பிரகாஷ் ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – எஸ். யூ. அருண் குமார்.

ஒளிப்பதிவாளர் – தேனி ஈஸ்வர்.

படத்தொகுப்பாளர் – ஜி. கே. பிரசன்னா.

இசையமைப்பாளர் –  ஜீ. வி. பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் – HR பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் – ரியா ஷிபு , மும்தாஸ் M.

ரேட்டிங் –  4.25./5.

மதுரையில் தன் மனைவி கதாநாயகி துஷாரா விஜயன் மற்றும் தாய் மகள் மகனுடன் கதாநாயகன் விக்ரம் மளிகை கடை நடத்தி கொண்டு வாழ்ந்து வருகிறார்

இவர் இதற்கு முன் கதாநாயகன் விக்ரம் பெரிய ரவுடியான ரவுடி ப்ருத்வி கேங்கில் முக்கிய நபராக இருந்து வெட்டுக்குத்து ரவுடிசம் வேண்டாம் என தனது குடும்பத்துடன் மளிகை கடை நடத்தி வருகிறார்.

காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யா கேங்ஸ்டராக இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் அவரது தந்தை மாருதி பிரகாஷ் ராஜ் என்கவுண்டர் செய்வதற்காக முயற்சித்து  வருகிறார்

இந்நிலையில் என்கவுண்டரில் இருந்து மகன சுராஜ் வெஞ்சரமூடு காப்பாற்றுவதற்காக காவல்துறை அதிகாரியான  எஸ்.ஜே சூர்யாவை காலி செய்வதற்காக மாருதி பிரகாஷ் ராஜ் கதாநாயகன் விக்ரமின் உதவியை நாடுகிறார்.

ஆனால் காவல்துறை அதிகாரியான  எஸ்.ஜே சூர்யாவை கொலை செய்வதற்கு கதாநாயகன் விக்ரம் இதற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார்.

அதன் பின் மாருதி பிரகாஷ் ராஜ்  கதாநாயகன் விக்ரம் காலில் விழுந்து கெஞ்சி கேட்டப்பிறகு காவல்துறை அதிகாரியான  எஸ்.ஜே சூர்யாவை கொலை செய்வதற்கு சம்மதிக்கிறார்.

ஒரே இரவில் கதாநாயகன் விக்ரம் காவல்துறை அதிகாரியான  எஸ்.ஜே சூர்யாவை தீர்த்து கட்டுவதற்கு திட்டம் போட.. சுராஜ் வெஞ்சரமுடூ காவல்துறை அதிகாரியான  எஸ்.ஜே சூர்யா என்கவுண்டரில் கொல்வதற்கு திட்டம் போட.. அதற்குப் பின் என்ன ஆனது?

கதாநாயகன் விக்ரம் யார்? கதாநாயகன் விக்ரமின் பின்னணி என்ன? காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவிற்கும் சுராஜ் வெஞ்சரமுடூ என்ன பகை? என்பதுதான் இந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வீர தீர சூரன் திரைப்படத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சீயான் விக்ரம் நேச்சுரலான நடிப்பை கொடுத்து மிகவும் ரசிக்கும்படியாக நடித்துள்ளார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சீயான் விக்ரம் ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.

எஸ். ஜே சூர்யா அவரது வில்லத்தனத்தை காட்டி மிக அருமையாக மிரட்டியுள்ளார்.

இந்த வீர தீர சூரன் திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் கொடுக்கப்பட்ட  கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு அவருடைய  பாணியில் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும்  மாருதி பிரகாஷ் ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி, அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் மிகவும் தத்ரூபமாக  காட்சிப்படுத்திருக்கிறார்

இசையமைப்பாளர் வி பிரகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். சியான் விக்ரமின் பீஜியத்திற்கு மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் அதிருகிறது.

ஒரே இரவில் நடக்கும் முன்னாள் பகையை பழி தீர்க்கும் கொள்ளும் கதையை கையில் எடுத்து மிக அருமையான திரை கதையை கொடுத்து மிகச் சிறப்பான திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.யூ அருண்குமார்.

மொத்தத்தில், இந்த வீர தீர சூரன் திரைப்படம் வெற்றி சூடா போகும் வெற்றி வீரன்!