‘வேட்டையன்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜி எம் சுந்தர், அபிராமி, ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்ஷன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- த.செ. ஞானவேல்.
ஒளிப்பதிவாளர் :- SR கதிர் ISC.
படத்தொகுப்பாளர் :- பிலோமின் ராஜ்.
இசையமைப்பாளர் :- அனிருத் ரவிச்சந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :- லைகா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன்.
ரேட்டிங் :- 4./5
மக்களுக்கு கிடைக்க வேண்டிய தாமதமான நீதி அப்பாவி மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதி என வாழ்ந்து கொண்டிருப்பவர் எஸ்.பி. அதியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மனித உரிமைகள் ஆணையத்தில் நீதிபதி சத்யதேவ் அமிதாப்பச்சன் காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டருக்கு எதிரியானவர்.
இந்த இரண்டு துருவங்களுக்கு இடையேயான நடக்கும் கதைதான் வேட்டையன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உயர் காவல்துறை அதிகாரியான கதாநாயகன் ரஜினிகாந்த், இந்த ஊரில் உள்ள கஞ்சா கொலை கொள்ளை கற்பழிப்பு செய்யும் குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை அழிப்பதற்கும் சட்டத்தை விட குற்றம் செய்த குற்றவாளியை என்கவுண்டர் செய்வதுதான் மிகவும் சரியான வழி, என்ற மனநிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
குற்றம் செய்யாத குற்றவாளிகளை தண்டனைப் பெறக் கூடாது என்றும் குற்றம் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் மூலம் தண்டித்தால் மட்டுமே சட்டம் அனைவருக்கும் சமமாகும் என்ற மனநிலையோடு காவல் துறையினர் நடத்தும் என்கவுண்டர்களுக்கு எதிரான மனநிலையோடு பயணிக்கிறார்
மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதி சத்யதேவ் அமிதாப்பச்சன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் துஷாரா விஜயன் கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி காவல்துறையினரின் காவலில் இருக்கும் குற்றவாளி தப்பித்து விடுகிறான்.
பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் கற்பழித்து கொடூரமான கொலை செய்த குற்றவாளியை என்கவுண்டர் செய்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படும் உயர் காவல்துறை அதிகாரியான கதாநாயகன் ரஜினிகாந்த், உண்மை தன்மை அறியாமல் அவர் நிரபராதி என தெரியாமல் என்கவுண்டர் செய்து விடுகிறார்.
குற்றம் செய்யாத குற்றவாளியை குற்றம் செய்ததாக நினைத்து என்கவுண்டரில் மனித உரிமை நீரில் இருப்பதாக குற்றம் சாட்டும் மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதி சத்யதேவ் அமிதாப்பச்சன் தலைமையிலான விசாரணைக் குழு, கடந்த என்கவுண்டரின் பின்னணியை விசாரிக்கும் போது பல உண்மைகள் தெரிய வருவதோடு, என்கவுண்டர் மூலம் குற்றவாளிகளை தண்டிப்பது சரியான பாதை அல்ல, என்பதை உணர்ந்துக் கொள்ளும் கதாநாயகன் ரஜினிகாந்த்,
ஆசிரியை துஷ்ரா விஜயனை கற்பழித்து கொலை செய்தது யார்? அந்த உண்மையான குற்றவாளியை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘வேட்டையன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வேட்டையன் திரைப்படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
அதியன் என்ற உயர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தின் முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் முலம் வேட்டையாடும் வேட்டையனாக கலக்கியிருக்கிறார்.
திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் காவல்துறையினர் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யும் வேட்டையனாக இருப்பதை விட கதாநாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்களின் பாதுகாவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.
“குறி வச்சா எற விழனும்” என்ற பஞ்ச் வசனம் மூலம் திரையரங்கையே அதிர வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ரசிகர்களையும் மற்றும் திரைப்பட ரசிகர்களையும் மிக அருமையாக திருப்திப்படுத்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன், தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்.
கதாநாயகன் ரஜினிகாந்த் வலது கரமாக நடித்திருக்கும் பகத் பாசில், பேசும் வசனங்கள் “மூளை இல்லனா போலீஸ் ஆகலாம், திருடனாக முடியாது” என்று காவல்துறையை கலாய்க்கும் நல்ல மூளை உள்ள திருடன் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
கல்வி வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா டக்குபதி பொருத்தமாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ரஜினிகாந்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங், அரசு பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர், ஜி.எம்.சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், கல்வி வியாபாரி ராணா டக்குபதி தோழியாக அபிராமி, ரோகிணி, ரக்ஷன் என்று திரைப்படத்தில் பலர் இருந்தாலும் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்ப அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு மூலம் ஆக்ஷன் காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தனது கேமரா ஜாலங்கள் மூலம் அதிரடியாகவும் அருமையாகவும் காண்பித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் “மனசுலாயோ…” பாடல் மனதில் ஒட்டிக்கொள்ள, ”வேட்டையன் தீம்” பாடல் மற்றும் ”ஹண்டர் வந்தார்” பாடல் காட்சிகளுக்கு ரசிகர்களுக்கு வேகம் கொடுக்கும் விதமாக இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை வழக்கமான பாணியில் பயணிக்காமல் புதுவிதமான விதத்தில் இசையமைத்திருக்கிறார்.
இதுவரை சொல்லப்படாத, கதையும் இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கதையும் கல்வி தான் எதிர்காலம் என்று நினைக்கும் அப்பாவி மக்களுக்கு நீட் என்ற பிரச்சனையை வைத்து கொள்ளடிக்கும் கல்வி நிறுவனங்களால் ஏற்படும் சமூக பிரச்சனையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற மிகப் பெரிய உச்ச நட்சத்திரத்தை வைத்து மிகவும் அருமையான முறையில் சொல்லியிருப்பதோடு, ஒரு முழுமையாக கிரைம் திரில்லர் சஸ்பென்ஸ் ஜானர் திரைப்பட அனுவத்தை மிகவும் அருமையான இயக்கியிருக்கிறார் இயக்குநர் டி.ஜி.ஞானவேல்.
மொத்தத்தில், ‘வேட்டையன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.











