அஜித்குமார் திரைப்படத்திற்காக புல்லட் ஓட்டும் காலா கதாநாயகி.
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார்
கொரோனா பீதி காரணமாக நாட்டில் உள்ள அனைத்து திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் வலிமை திரைப்படமும் அடங்கும்.
இந்த திரைப்படத்தில் அஜித்குமாருக்கு
கதாநாயகியாக ஹூமா குரேஷி நடித்து வருகிறார்.
இவர் காலா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், ஹூமா குரேஷி, புல்லட் ஓட்டும் திரைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வாழ்க்கை என்பது தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கிறது. அத்துடன் உங்கள் பயத்தை மீறுவதிலும் என் பதிவிட்டுள்ளார்.











