பழம்பெரும் நடிகை எம்.ஏன்.ராஜம் அவர்களது கணவரும் பழம்பெரும் பிரபல பின்னணி பாடகரும் ஏ.எல்.ராகவன் !
பழம்பெரும் பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே அவருக்கு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சென்னை அருகே உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலமானார். இவருக்கு வயது 87
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் 1933ல் பிறந்தவர் ஏ.எல்.ராகவன். 1950ம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சி.எஸ்.ஜெயராமன் அவர்களால் திரைப்பட துறையில் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார்.
இவர் தொடர்ந்து இசையமைப்பாளர்கள் (சி.எஸ்)சுப்புராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன் உள்பட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடி திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஏ.எல்.ராகவன்
1980ம் ஆண்டு வரை திரையுலகில் ஏ எல் ராகவன், எங்கிருந்தாலும் வாழ்க. என்ன வேகம் நில்லு பாமா. போன்ற நூற்றூக்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியவர். பழம் பெரும் நடிகர் ஜெமினிகணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.
திரைப்பட துறையில் பின்னணி பாடகராக மட்டுமல்லாமல் அலைகள், அகல்யா என தொலைக்காட்சி தொடர்களிலும் ஏ.எல்.ராகவன் நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்த பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் அண்மைக்காலமாக வயது மூப்பு காரணமாகவும் மூச்சுத் திணறல் காரணமாகவும் நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் 87 வயதில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பழம்பெரும் நடிகையான எம்.என்.ராஜமின் கணவரான
பிரபல பின்னணி பாடகர்
ஏ.எல்.ராகவனின் இறுதிச்சடங்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
பிரபல பின்னணி பாடகர்
ஏ.எல்.ராகவன் அவர்களின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவருடைய திடீர் மறைவு பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.











