மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படம் திரையிடும் தேதி மாற்றம் ! *
‘இயக்குனர் சரண் இயக்கத்தில், நடிகர் பிக் பாஸ் புகழ் ஆரவ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. இந்தத் திரைப்படத்தில் லேடி தாதாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் வருகின்ற 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.











