ஆஸ்கார் நாயகனுக்கு முதல் முதலில் வாய்ப்பு வழங்கிய  இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் காலமானார்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் எம் கே அர்ஜுனன் அவர்கள் இன்று காலமானார்

50 ஆண்டுகளுக்கு முன்னால் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எம். கே. அர்ஜுனன்.

500 க்கு மேற்பட்ட திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதாவது சுமார் 200 மலையாள திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவரின் இசையில் தான் முதல் முதலில் கே.ஜே. யேசுதாஸ் பாடல்களை பாடினார்.

இசையமைப்பாளர் எம் கே அர்ஜுனன் அவர்கள்தான் கே ஜே யேசுதாஸ் அவர்களை பாடகராக அறிமுகம் செய்து வைத்தார்

மேடை நாடகங்களிலும் இசை பணியாற்றியுள்ளார் இவர்.

இவருக்கு 2017 ஆம் ஆண்டு பயானகம் என்ற மலையாளத் திரைப்படத்திற்காக கேரளா அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.

இதைபோல் 1981 ஆம் ஆண்டு எம் கே அர்ஜுனன் இசையமைத்த அடிமச்சாங்களா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் கீபோர்டு வாசித்தார்.

தனக்கு முதல் வாய்ப்பு வழங்கியவர் என்பதால் எம் கே அர்ஜுனன் மீது ஏ ஆர் ரஹ்மானுக்கு தனி மரியாதை உண்டு.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று கொச்சியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

எம்.கே.அர்ஜுனன் மறைவுக்கு கேரளா முதல்வர் மற்றும் மலையாள திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Veteran Malayalam Music Composer M.K.Arjunan passed away

Music director MK Arjunan.

error: Content is protected !!