கனடாவில் சிக்கி தவிக்கும் தளபதி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித்குமார் போனில் நலம் விசாரித்தார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நமது மத்திய அரசும் மாநில அரசும் பலவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தளபதி விஜய் மகனைப் பற்றிய கவலைப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளதால்.
கனடாவில் சிக்கி தவிக்கும் தளபதி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித்குமார் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார்.
இதனிடையே கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை.
இதை நினைத்து தளபதி நடிகர் விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம் தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின.
இதுபற்றி அறிந்த நடிகர் அஜித்குமார், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார்.
‘பயப்படும்படியாக எதுவும் இல்லை. சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார்.
தளபதி நடிகர் விஜய்யும், அஜித்குமாரும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.











