கொரோனாவால் மீண்டும் மருத்துவராக மாறிய பாலிவுட் நடிகரான ஆஷிஷ் கோகலே ! குவியும் பாராட்டுகள்!
பாலிவுட் நடிகரான ஆஷிஷ் கோகலே நடிப்பில் இருந்து தற்காலிக விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவராகப் பணிபுரிய ஆரம்பித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் கப்பார் இஸ் பேக் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகரானார் ஆசிஷ் கோகலே. இவர் ஒரு மருத்துவர் ஆவார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மருத்துவப் பணியில் இருந்து விலகி இருந்தார்.
ஆனால் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் மருத்துவர்களின் தேவை அதிகமாகியுள்ள நிலையில் மீண்டும் தான் முன்பு பணிபுரிந்த மருத்துவமனையிலேயே மருத்துவராக சேர்ந்து பணியாற்ற உள்ளார்.
கும்கும் பாக்யா தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகரானவர் ஆசிஷ் கோகலே(31). நடிக்க வரும் முன்பு அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் பகுதியில் மருத்துவராக இருந்தார்.
மும்பைக்கு ஜாகையை மாற்றிய ஆசிஷ் டிவி தொடர்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர் அக்ஷய் குமாரின் கப்பார் இஸ் பேக் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் மராத்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆசிஷ். இது தவிர அவரை விரைவில் வெப் தொடரிலும் பார்க்கலாம்.
ஆசிஷ் பகல் நேரத்தில் தொடர்கள், படங்களில் நடிக்கிறார், இரவில் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு ஆசிஷ் முழுநேர மருத்துவராக மாறிவிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது, லாக்டவுனுக்கு முன்பு பகலில் நடிகராகவும், இரவில் மருத்துவராகவும் இருந்தேன். கடைசியாக மார்ச் 14ம் தேதி ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் என்றார்.
அவரது இந்த செயலுக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன..











