கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஹாலிவுட் நடிகர், நடிகைகள், பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் ஹாலிவுட்டை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது.

அமெரிக்காவை அடுத்ததாக பிரிட்டனில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அங்கு அதிக அளவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

கடந்த சில மணி நேரங்களில் மட்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 980 கடந்துள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணத்தால் கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹிலாரி ஹித் 1968-ம் ஆண்டு வெளியான மைக்கேல் ரீவ்ஸின் விச்பைண்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் ஐம்பதிற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஹிலாரி ஹித் அவ்புலி பிக் அட்வென்ச்சர். நில் பை சவுத் ஆகிய திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

1974-ஆம் ஆண்டு டாங்கன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஹிலாரி ஹித்க்கு லாரா என்ற மகளும் டேனியல் என்ற மகனும் உள்ளனர்.

இவர் இறுதியாக 2014ஆம் ஆண்டு ஜமைக்கா இன் என்கின்ற குறும் தொடர் ஒன்றை தயாரித்தார்.

74 வயதாகும் ஹிலாரி ஹித் சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹிலாரி ஹித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் அலெக்ஸ் வில்லியம்ஸ் சோசியல் மீடியா  பக்கத்தில் அறிவித்துள்ளார்.