சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ப்பட்ட அவமானம் கொரோனா வைரஸ் பற்றி விடியோவை நீக்கியது ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் என்ற மிருகம் பல நாடுகளில் அச்சுறுத்தி வருகிறது.
தற்போது இந்தியாவிலும் நுழைந்து பல உயிர்களை தாக்கி வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்த ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தெற்று இருக்கிறது என்பதால் அவர்களை தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்தியாவில் இதனை தடுக்கும் முயற்சியாக இனறு ஞாயிற்றுக்கிழமை
நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்தியுள்ளார்.
இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் மார்ச் 21 தேதி அன்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது அது மூன்றாவது நிலைக்கு போய்விடக்கூடாது.
பொதுமக்கள் வெளியில் நடமாடும் இடங்களில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வைரஸ் பரவாமல் இருந்தாலும் மூன்றாவது நிலைக்கு போவது நாம் தடுத்து விடலாம்.
இதனை கருத்தில் கொண்டு இனறு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதைப் போன்று வேண்டுகோளை இத்தாலி அரசு விடுத்தது ஆனால் இத்தாலி மக்கள் அதை பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவில் இந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்று ரஜினிகாந்த் ஒரு வகுத்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ டுவிட்டரில் விதிமுறைகளை மீறி உள்ளதாக கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீங்கி உள்ளது
ஆனால் என்ன விதிமீறல் இருக்கிறது என்பது பற்றி ட்விட்டர் தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை.
ரஜினிகாந்த் கூறிய கொரோனா வைரஸ் தகவல்கள் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வைரஸ் உறுதியானவை என கருத முடியாததால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிர்வாகம் எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது மேலும் shame on Twitter என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.