திரைப்படங்களில் நாம் காண்பவர்கள் அனைவரும் ரீல் கதாநாயகர்கள்தான் அவர்கள் அனைவரும் ரியல் கதாநாயகர்கள் இல்லை.?

சின்னதிரையில் தொடங்கிய இவரது வாழ்க்கை திரைப்படங்களிலும் தனது பயணத்தை தொடர்ந்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

கடந்த 2013-ம் ஆண்டில் Kai Po Che திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான Dhoni the untold story திரைப்படத்தில் மகேந்திர சிங் தோனியாகவே வாழ்ந்து காட்டினார்.

இந்த திரைப்படத்தின் மூலம்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார்.

பாலிவுட் திரைப்பட உலகில் ஏழு ஆண்டுகளில் பத்து திரைப்படங்கள். 34 வயதிற்குள் மிக பிரபலமான நடிகராக உயர்ந்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்க்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்து வந்ததாக ஊடகங்களில் அடிக்கடி செய்தி வெளியானது.

இவர்கள் இருவரின் திருமணம் நவம்பரில் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பாவம்
அவருக்கு என்ன பிரச்சினையோ..? அது தற்கொலை முடிவாக மாற்றிவிட்டது.

இவர் கடைசியாக நடித்த சிச்சோரே தற்கொலைக்கு எதிரான கருத்தை வலியுறுத்திய திரைப்படம்.

திரைப்படங்களில் வீர வசனம் பேசிய இவர் நிஜ வாழ்க்கையில் கோழையாக மாறி தற்கொலை செய்துக் கொல்லும் அளவிற்கு சென்றுவிட்டார்.

ஒரு பக்கம் ரசிகர்கள் மீளா முடியாத துயரத்தில் இருந்தாலும் அவரை விரும்பியவர்களுக்கே இது மிக பெரிய பேரதிர்ச்சியாக இருக்கிறது.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

திரைப்படங்களில் நாம் காண்பவர்கள் அனைவரும் ரீல் கதாநாயகர்களை அவர்கள் ரியல் கதாநாயகர்கள் இல்லை…

திரைப்படங்களில் கதாநாயகர்கள் கூறுவதை ரசிகர்களாகிய நீங்கள்
முழுமையாக நம்பி விட வேண்டாம்.

யாரோ ஒரு இயக்குனர் எழுதிய வசனத்திற்கு அவர்கள் நடிக்கிறார்கள். அவ்வளவுதான்..

இனிமேலாவது திரைப்படங்களில் நடிக்கும் உங்கள் அபிமான கதாநாயகர்களை கூறுவதைக் கண்மூடித்தனமாக நம்பி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை முடிவை எடுக்கும் முன்.. நாம் திரைப்படங்களில் இப்படி எல்லாம் பேசி நடித்தோமே… நமது ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்? என்று ஒரு நிமிடம் யோசித்திருக்கலாம்…

கடந்த ஜூன் 3-ம் தேதி கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் … தனது தாயின் மறைவுக்கு பிறகு வாழ்க்கையே மாறிவிட்டதாகவும் அந்த சோகத்தை நடிப்பின் மூலம் ஈடு செய்து வருவதாகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆத்மா சாந்திடைய எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறோம்.

கூடுதல் தகவல்..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் – 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் –
044 -24640050