அஜித்குமார் பெயரில் பேஸ்புக் அக்கௌண்ட் ட்விட்டர் அக்கௌண்ட் இல்லை அறிக்கை வெளியிட்ட அஜித்குமார்.!
நடிகர் அஜித்குமார்… தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்.
இவர் தன்து பட விழாக்களில் கூட கலந்துக் கொள்ள மாட்டார். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளத்திலும் இவர் இல்லை.
இந்த நிலையில் அஜித்குமார் பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்று இன்று தொடங்கப்பட்டுள்ளது.
அதில் அஜித்குமாரின் அறிக்கை போல ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில்… நான் பல வருடங்களுக்கு முன் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கி இருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.
இதற்கான காரணங்களை பலமுறை நான் தெரிவித்திருந்தேன்.
இந்நிலையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம்.
மேலும் இதை காரணமாக வைத்து சமூக வலைத்தளங்களில் எனது ரசிகர்கள் எந்தவிதமான தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
அதில் அஜித்குமாரின் கையெழுத்தும் உள்ளது.
இதையடுத்து மகிழ்ச்சியில் தல அஜித்குமார் ரசிகர்கள் ஏராளமானோர் இதில் இணைந்தனர்.
இந்நிலையில் அஜித்குமார் தரப்பில் அவரது வழக்கறிஞர் MS பரத் அவர்கள் அது போலியான பேஸ்புக் கணக்கு என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்க இருக்கிறார்களாம்.