திரைப்பட உலகில் புகழ்பெற்ற முன்னணி குரல் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி காலமானார்.!

சென்னை 28 ஜனவரி 2023 திரைப்பட உலகில் புகழ்பெற்ற முன்னணி குரல் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி காலமானார்.!

அவருடைய தற்போது வயது 55

1990-களில் திரைப்பட உலகில் ப பின்னணி குரல் கலைஞராக தனது பணியைத் தொடங்கிய ஸ்ரீனிவாச மூர்த்தி கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு மேல் குரல் கொடுத்துள்ளார்.

இவர், தெலுங்கில் வெளியாகும் தமிழில் உள்ள மூன்னணி கதாநாயகர்கள் நடிகர் சூர்யா, அஜித்குமார், விக்ரம் அனைத்து திரைப்படங்களுக்கு ஆஸ்தான டப்பிங் கலைஞராக இருந்துள்ளார்.

இந்நிலையில், 27 ஜனவரி 2023 அன்று காலை அவர் விட்டு மாடியில் பூஜைக்கு பூ பறிக்க சென்ற போது கால் தவறு இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தால் தலையில் பலத்த காயம் பட்டதால் உடனடியாக சிகிச்சைக்கு வடபழனி உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீனிவாச மூர்த்தி காலமானார்.

அவர் தற்போது டப்பிங் கலைஞர் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்து வருகிறார்

சீனிவாச மூர்த்தியின் வீட்டு முகவரி: எண் 18 B, கடம்பாடி நாயக்கர் தெரு, விஜயா நகர் அருகில், இரண்டாவது தெரு, ஸ்ரீதேவி கார்டன் ரோடு, வளசரவாக்கம், சென்னை – 600087.

அன்னாரின் இறுதி ஊர்வலம் சனிக்கிழமை (ஜனவரி 28) அன்று காலை 11 மணிக்கு இல்லத்தில் இருந்து புறப்பட்டு கேசவர்த்தினி இடுகாட்டை சென்றடையும்.

சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும்  பெப்சி நிர்வாகிகள் மற்றும் 23 சங்கத்தின் நிர்வாகிகள் திரையுலக பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.