பிரபல நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.!!

சென்னை 20 பிப்ரவரி 2023 பிரபல நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.!!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி 19 பிப்ரவரி 2023 அன்று அதிகாலை 3.30 மணிக்கு மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.

அவருக்கு தற்போது வயது 57.

நடிகர் மயில்சாமி, நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார்.

டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகர் மயில்சாமி, சிவன் பாடல் பாடிவிட்டு கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார்.

சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த நடிகர் மயில்சாமிக்கு 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

அடுத்து அவரை போரூர் தனியார்   மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று 20 பிப்ரவரி 2023 காலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கி ஏவிஎம் பின்புறம் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகின்றது.

அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் மயில்சாமி சிவபக்தர் என்பதால் அவருக்கு கைலாய வாத்தியம் இசைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது.

அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நடிகர் மயில்சாமி இறப்பு மிகப்பெரிய இழப்பு என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

அந்தத் தெருவில் உள்ள வாயில்லா ஜீவன்கள் கூட கண்கலங்கி விட்டது.

வீட்டில் இருந்து புறப்பட்ட நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.