பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் தனது 13-வயதில் நடன இயக்குநர் சோஹன்லாலை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் போது சோஹன்லாலுக்கு 41 வயதாகி இருந்தது

அவரிடம் இருந்து நடனத்தைக் கற்றுக் கொண்ட நடன இயக்குனர் சரோஜ் கான் திரைப்படங்களில் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றினார்.

நடன இயக்குனர் சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா நாக்பால். மகாராஷ்டிராவில் இந்துவாகப் பிறந்து திருமணத்திற்கு பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மாறினார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவுக்கு சரோஜ் கானின் பெற்றோர் குடிவந்தனர்.

தனது சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த சரோஜ் கான் பின்னர் நடனக்குழுவில் பணியாற்றினார்.

கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடன இயக்குநராக இருப்பவர் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார்.

பாலிவுட்டில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் ‘ஏக் தோ தீன்’, ‘தாக் தாக்’, ‘ஹவா ஹவா’, ‘தம்மா தம்மா’ போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கானுக்கு
மூன்று வெற்றிகளுடன் சிறந்த நடனக் கலைக்கான தேசிய திரைப்பட விருதுகளை பெற்ற திரைப்படங்கள்

2003 தேவதாஸ் “டோலா ரீ டோலா” சிறந்த நடனக்கலை வென்றது

2006 சிருங்காரம் அனைத்து பாடல்களும் வென்றது

2008 ஜப் வி மெட் “யே இஷ்க் ஹாயே” வென்றார்

மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.

இதில் ஒரு விருது தமிழில் அதிதிராவ் நடித்த சிருங்காரம் என்ற திரைப்படத்திற்காக அனைத்து பாடல்களுக்கும் 2006 ஆண்டு கிடைத்தது.

ஃபிலிம்ஃபேர் சிறந்த நடன இயக்குனர் விருதை முதலில் பெற்றவர் நடன இயக்குனர் சரோஜ் கான். தேசாபின் கானின் “ஏக் டோ டீன்” பாடலுக்கு சிறந்த நடன மற்றும் பார்வையாளர்களின் பதிலைப் பார்த்தபின் பிலிம்பேர் இந்த விருதை ஏற்படுத்தியது.

நடன இயக்குனர் சரோஜ் கான் 1989 முதல் 1991 வரை 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வென்ற பிலிம்பேர் விருதுகளில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றார்.

8 பிலிம்பேர் சிறந்த நடன இயக்குனருக்கான விருதுகளை வென்ற சாதனையையும் நடன இயக்குனர் சரோஜ் கான் அவர்கள் எட்டு முறை பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்..

2008 – குரு
2003 – தேவதாஸ்
2000 – ஹம் தில் தே சுகே சனம்
1994 – கல்நாயக்
1993 – பீட்டா
1991 – “ஹம்கோ ஆஜ் கல் ஹை இன்டிசார்” பாடலுக்கு சைலாப்
1990 – சால்பாஸ்
1989 – தேசாப்

எட்டு முறை பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

குறிப்பாக மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக ஸ்ரீதேவி நடித்து பாலிவுட்டில் சக்கைபோடு போட்ட ‘நாகினா’, ‘சாந்தினி’ திரைப்படங்களுக்கு சரோஜ் கான் நடன இயக்குநராக இருந்தார்.

‘தேஜாப்’ திரைப்படத்தில் வரும் ‘ஏக் தோ தீன்’ பாடல், மாதுரி தீட்சித்தின் ‘தானேதார்’ திரைப்படத்தில் வரும் ‘தம்மா தம்மா’ பாடல், ‘பேட்டா’ திரைப்படத்தில் வரும் ‘தாக் தாக் கர்னே’ ஆகியவை நடன இயக்குனர் சரோஜ் கானுக்கு பாலிவுட் திரைப்பட உலகில் பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தன.

சமீபத்தில் சஞ்சீய் லீலா பன்சாலியின் ‘தேவதாஸ்’ திரைப்படத்தில் ‘தோலா ரே தோலா’ பாடலுக்கும் சரோஜ் கான் நடன இயக்குநராக இருந்தார்.

கரீனா கபூர் நடித்த ‘ஏ இஸ்க் ஹயே’ பாடலிலும் சரோஜ் கான் பணியாற்றினார்.

கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் கரண் ஜோகர் தயாரிப்பில் கலங்க் திரைப்படத்தில், ‘தபா ஹோயேகே’ பாடலுக்கு நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றினார்
என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அவர் மும்பையில் பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சுவாசக் குறைபாடு பிரச்சினையால் கடந்த சனிக்கிழமை நடன இயக்குனர் சரோஜ் கான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடனடியாக அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என்றும் அவருக்கு ஏற்கெனவே இருக்கும் மூச்சு திணறல் பிரச்சனைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறி இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை நடன இயக்குனர் சரோஜ் கானின் உறவினர் மணிஷ் ஜக்வானியும் பிடிஐ நிருபரிடம் உறுதி செய்துள்ளார்.

நடன இயக்குனர் சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகைனா கான் என்ற மகளும் உள்ளனர்.

நடன இயக்குனர் சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

இவரின் நினைவஞ்சலிக் கூட்டம் முன்று நாட்களுக்குப் பிறகு நடைபெறும் என்று சரோஜ் கானின் மகள் சுகைனா கான் தெரிவித்தார்.

நடன இயக்குனர் சரோஜ் கானுக்கு மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/sinikag/status/1278860453620314112?s=19