பிரபல இயக்குநர் மற்றும் நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பினால் காலமானார்.!

சென்னை 24 ஜனவரி 2023 பிரபல இயக்குநர் மற்றும் நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பினால் காலமானார்.!

தமிழ் திரைப்பட உலகில் பிரபல இயக்குநர் நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் காரணமாக நேற்று இரவு காலமானார்.

இதனை அவரின் மகன் கலைச்செல்வன் ராமதாஸ் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் அவர்கள் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்த  ஈ. ராமதாஸ் தமிழ் திரைப்படத்தின் மீதான மோகத்தால் சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்.

பின்னர் இவர் 1979 ஆம் ஆண்டு சென்னை, மைலாப்பூரில் குடியேறினார். தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர்.

அவருடைய தந்தை ஒரு விடுதலைப் போராட்ட வீரர்  எத்திராஜுலு பிள்ளை மற்றும் அவருடைய தாயார் பூங்கவனம் ஆகிய இருவருக்கும் மகனாக பிறந்தார்.

தனது இளம் வயதில், இவர் தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்தார்.

கல்லூரியில் படித்த காலத்தில், கதை, திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டார்.

தமிழ் திரைப்பட உலகில் திரைப்படங்களில் பணியாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அங்கு இவரது பக்கத்து வீட்டுக்காரராக இருந்த திரைப்பட துறையை சார்ந்த  மனோபாலாவுடன் பழகினார்.

மனோபாலா இவரை டி.கே.மோகன் உள்ளிட்ட திரைப்பட பிரமுகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவருக்காக இராமதாஸ் முதன்முதலில் வெளிவராத “கரடி” (1980) என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதினார்.

இராமதாஸ் தனது முதல் திரைக்கதை பணியாக பி. எஸ். நிவாஸ் இயக்கத்தில் சுமன், சுமலதா ஆகியோர் நடித்த “எனக்காக காத்திரு”(1981) திரைப்படத்திற்காக திரைக்கதை எழுதினார்.

நிவாசுடன் பணிபுரிந்த பிறகு, இராமதாஸ் ஆறு திரைப்படங்களில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

அதன் பின்னர் மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத்தம்பியிடம் பணிபுரிந்தார்.

கோவைத்தம்பியின் பல திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு மோகன், சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த “ஆயிரம் பூக்கள் மலரட்டும்”
(1986) திரைப்படத்தின் மூலம் இராமதாசை இயக்குநராக கோவைத்தம்பி அறிமுகப்படுத்தினார்.

கோவைத்தம்பிக்கும் திரைப்படத்தின்  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

ஆனாலும் திரைப்படத்திற்கு இது ஒரு இலவச விளம்பரமானதால், திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இவரது அடுத்த திரைப்படமான “ராஜா ராஜாதான்” (1989) திரைப்படத்தில் ராமராஜன், கௌதமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரியும் வாய்ப்புகளைப் பெறுவதில் தோல்வியுற்ற இராமதாஸ் அடுத்து மன்சூர் அலிகானுடன் “இராவணன்” (1994) என்ற அதிரடி திரைப்படத்தையும் “வாழ்க ஜனநாயகம்” (1996) என்ற அரசியல் நையாண்டி திரைப்படம் என்று இரண்டு திரைப்படங்களை இயக்கினார்.

அதன் பின்னர் இராமதாஸ் ஒன்பது இயக்குனர்களுடன் இணைந்து பல கதாநாயகர்கள் நடிக்க 24 மணிநேரத்தில் எடுக்கபட்ட சுயம்வரம் (1999) திரைப்படத்தில் பணியாற்றினார்.

அந்த திரைப்படத்தில் பாண்டியராஜன் கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

இயக்குனராக இவர் பணியாற்றியதைத் தவிர பெரும்பாலும் எழுத்தாளராக மற்ற திரைப்பட இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்தார்,

“மக்கள் ஆட்சி” (1995), “சங்கம் ” “கண்ட நாள் முதல்” (2005) உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றினார்.

அதன் பின்னர் இவர் “வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” (2004) திரைப்படத்தில் வார்டு பாயாக நடித்ததைத் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளை வர தொடங்கியது

பின்னர் இவர் “யுத்தம் செய்” (2011) திரைப்படத்தில் காவலராக நடித்தார்.

அதைத் தொட்ந்து “காக்கிசட்டை” (2015), “விசாரணை”(2016), “தர்மதுரை” (2016), “விக்ரம் வேதா” (2017) ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ராமதாஸ்,  குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அவரின் மறைவுக்குப் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.