Saturday, October 23
Shadow

முதல்வர் வேட்பாளர் யார்⁉ – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதில்*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், முதல்வர் வேட்பாளர் யார்⁉ என்ற கேள்வி அரசியல் விமர்சர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என ஸ்ரீ ப்ரியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்றும், அதுகுறித்து இப்போது எதுவும் பேச முடியாது என்றும் கூறினார்.

மேலும் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் தனது கட்சியினர்களுடன் கலந்து ஆலோசித்து இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

CLOSE
CLOSE